சதாமுக்கு தூக்கு: வரவேற்பும், எதிர்ப்பும்!

Subscribe to Oneindia Tamil

Saddam Husseinபாக்தாத்:சதாம் உசேனுக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டதை ஈராக் அரசும், அமெரிக்காவும் வரவேற்றுள்ளன.அதேசமயம் சன்னி பிரிவு முஸ்லீம்கள் இந்த தீர்ப்பை அரசியல் ரீதியாக திட்டமிடப்பட்ட தீர்ப்பு என்றுவர்ணித்துள்ளனர்.

ஷியா முஸ்லீம்களைக் கொன்று குவித்த வழக்கில் சதாம் உசேன், அவரது சகோதரர் திக்ரிதி உள்ளிட்ட 3 பேருக்குதூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 3 பேருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனையும், முன்னாள் துணை அதிபர்ரமதானுக்கு ஆயுள் தண்டனையும் கிடைத்துள்ளது. ஒருவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தீர்ப்பு குறித்து பல்வேறு நாடுகளும் கருத்து வெளியிட்டுள்ளன. ஈராக் அரசு இந்த தீர்ப்பைவரவேற்றுள்ளது. ஈராக் அரசில் இப்போது ஷியா பிரிவு முஸ்லீம்கள்தான் அதிகம் பேர் உள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது. ஈராக் அரசின் செய்தித் தொடர்பாளர் அலி அல் தப்பா கூறுகையில், இது எதிர்பார்க்கப்பட்டதீர்ப்புதான்.

இது மிகவும் குறைந்த தண்டனைதான். இதை விட மிகப் பெரிய தண்டனை எதுவும் இல்லை என்பதால் இந்தகுறைந்தபட்ச தண்டனை சதாமுக்குக் கிடைத்துள்ளது. அந்த அளவுக்கு அவர் கொடூரங்களை நிகழ்த்தியவர்என்றார் அவர்.

சன்னி பிரிவைச் சேர்ந்த ஈராக் எம்.பி. ஒருவர் கூறுகையில், இது அரசியல் ரீதியாக திட்டமிடப்பட்ட, அரசியல்நீதிமன்றத்திலிருந்து வெளியாகியுள்ள தீர்ப்பு. இது நியாயமற்ற ஒரு தீர்ப்பு என்று விமர்சித்துள்ளார்.

Saddam Husseinஅமெரிக்க ஆதரவு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பெரும் கேலிக்கூத்தாகும் என சதாமுக்காக ஆஜராகியவழக்கறிஞர் குழுத் தலைவர் பஸ்ரா அல் கலீல் கூறியுள்ளார். ஜோர்டான் தலைநகர் அம்மானில் அவர் இதுகுறித்துகருத்து தெரிவிக்கையில், அமெரிக்க ஆதரவு நீதிமன்றம், சதாம் உசேனுக்கு மரண தண்டனை விதித்துள்ளதுஎன்பது பெரிய கேலிக்கூத்தான ஒரு விஷயம்.

நீதிமன்றத்தையும், நீதியையும் கேலிப் பொருளாக்கி விட்டார்கள். இந்த நீதிமன்றமே சட்டவிரோதமான ஒன்று.அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களால் நியமிக்கப்பட்ட நீதிமன்றம் எப்படி ஈராக்கிய பிரஜை ஒருவரை தண்டிக்கமுடியும்? என்று ஆவேசமாக கூறினார்.

ஈராக் துணைப் பிரதமர் பர்ஹாம் சலீஹ் கூறுகையில், மிகுந்த வரவேற்ப்புக்குரிய தீர்ப்பு. கடந்த 35 ஆண்டுகளாகஈராக் மக்களுக்கு மறுக்கப்பட்டு வந்த நியாயம், நீதி இப்போது கிடைத்துள்ளது.

ஈராக் வரலாற்றில் கருப்பு அத்தியாயம் இத்துடன் மறையும். சதாம் உசேனை நம்மால் மறக்க முடியாது, அவர்செய்த கொடுமைகளையும் மறக்க முடியாது. இதை இப்படியே விட்டு விட்டு வளர்ச்சியை நோக்கி நாம்நடைபோட வேண்டும் என்றார்.

ஷியா இஸ்லாமிய பிரிவு தலைவர் அப்துல் அஜீஸ் அல் ஹக்கீம் கூறுகையில், சதாம் கதை முடிந்தது. அவரதுஅராஜகம், கொடூரம் ஆகியவற்றுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது, இனிமேல் இப்படிட்ட கொடுங்கோலர்கள்தோன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

ஈராக்குக்கான அமெரிக்க தூதர் சல்மாய் கலீல்ஸாத் கூறுகையில், ஈராக்கில் அமைதியை நிலை நாட்டும்முயற்சிகளுக்கு ஊக்கம் தரும் வகையிலான முக்கிய தீர்ப்பு இது.

இந்தத் தீர்ப்பு கிடைப்பதில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் மிகக் கடுமையாகபாடுபட்டுள்ளனர். மிகவும் உறுதியாக இருந்து இந்த வழக்கை சந்தித்துள்ளனர்.

ஈராக்கில் மீண்டும் சட்டத்தின் ஆட்சி திரும்பியுள்ளதை இந்த தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

வரும் நாட்களில் ஈராக்கில் பல கடுமையான சவால்களை சந்திக்க நேரிடலாம். ஆனாலும், சதாம் உசேனின்அத்தியாம் முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலம் பிரகாசமான எதிர்காலம் இருப்பதை யாராலும் மாற்ற முடியாதுஎன்றார் கலீல்ஸாத்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+