அரசு மருத்துவமனையில் 17 குழந்தைகள் மரணம்
கொல்கத்தா:கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 17 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதால்அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் பி.சி.ராய் அரசினர் குழந்தைகள் மருத்துவமனையில்தான் இந்த சோகம் நடந்துள்ளது. ஆனால்இதுபோன்ற சம்பவங்கள் வழக்கமானதுதான் என்று படு அலட்சியமாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளதுதான் மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு ஏராளமான குழந்தைகள் தொற்று நோய் சம்பந்தமாக அனுமதிக்கப்பட்டிருந்தன. அவற்றில் 8 குழந்தைகள்வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமை 9 குழந்தைகளும் இறந்தன. பிறந்து 3 மணி நேரமே ஆனது முதல் ஒரு மாதம்வரையிலான குழந்தைகள்தான் இப்படிப் பரிதாபமாக இறந்துள்ளன.
இதுகுறித்து மருத்துவமனைக் கண்காணிப்பாளர் எம்.கே.சாட்டர்ஜி கூறுகையில், இந்தக் குழந்தைகள்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இறந்து விட்டன. இது தற்செயலானதுதான்.ஏற்கனவே இந்த குழந்தைகளுக்கு நோய்த் தொற்று இருந்தது.
இதுபோல குழந்தைகள் மொத்தமாக இறப்பது அசாதாரணமானது அல்ல. இவற்றில் இரண்டு குழந்தைகள்அறுவைச் சிகிச்சையின்போது இறந்தன. அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன்பே, வெற்றி பெறுவதற்கானவாய்ப்புகள் மிகவும் குறைவு என்று உறவினர்களிடம் கூறி விட்டுத்தான் அறுவைச் சிகிச்சையைமேற்கொண்டோம் என்றார் சாட்டர்ஜி.
அடுத்தடுத்து 17 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் இறந்திருப்பது கொல்கத்தாவில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications