சிவகாசி: பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் பலி
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 6 பேர் உடல் கருகிஇறந்தனர். 65 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்த பட்டாசுகள் விடிய விடிய வெடித்ததால் அப்பகுதியில்பரபரப்பு நிலவியது.
சிவகாசியை அடுத்த மாரனேரி என்ற இடத்துக்கு அருகே சிங்கம்பட்டியில் ராஜேஸ்வரி ஃபயர் ஒர்க்ஸ் என்றபட்டாசு தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இங்கு பணியாற்றுவோருக்காக அங்கேயே வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டிருந்தன.
தீபாவளி விடுமுறையைத் தொடர்ந்து அக்டோபர் 27ம் தேதி முதல் மீண்டும் பட்டாசுத் தயாரிப்புப் பணிதொடங்கியது. சனிக்கிழமை காலை பட்டாசுத் தயாரிப்பில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். பிற்பகலுக்கு மேல்மழை பெய்யத் தொடங்கியதால் மாலையில் பட்டாசுத் தயாரிப்புப் பணி நிறுத்தப்பட்டது.
ஊழியர்கள் தாங்கள் தங்கியிருந்த வீடுகளுக்குச் சென்று விட்டனர். அப்போது சில ஊழியர்கள் ராக்கெட்டுகள்தயாரிக்கப் பயன்படும் குச்சிகளை பத்திரமாக ஸ்டோர் ரூக்கு கொண்டு சென்றனர். அந்த சமயத்தில் பெரியமின்னல் வெட்டியது. இதனால் பட்டாசு ஆலையில், தீப்பிடித்துக் கொண்டது.
அந்த அறையில் ஏராளமான வெடிகள் வைக்கப்பட்டிருந்தன. அத்தனையும் பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறஆரம்பித்தது. அப்போது அறையில் ராக்கெட் குச்சிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த மீனாட்சி, முருகன்,அஞ்சம்மாள், பழனிருகன் ஆகியோர் தீயில் கருகி பலியாயினர்.
இன்று காலை இடிபாடுகளை அகற்றப் பார்த்தபோது மகாலட்சுமி மற்றும் குமார் ஆகியோரின் உடல்கள் கருகியநிலையில் மீட்கப்பட்டன. இதனால் சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
விபத்தில் அந்தக் கட்டடம் அப்படியே தகர்ந்து விழுந்தது. பக்கத்தில் உள்ள வீடுகளுக்கும் தீ பரவியதால் அங்கும்பலர் தீயில் சிக்கி காயமடைந்தனர். மொத்தம் 65 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் நேற்று இரவு முழுவதும் வெடித்துச் சிதறின. தீயணைப்புப்படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தொழிலாளர்கள் தங்கியிருந்த அத்தனை வீடுகளும் கூடஇந்த விபத்தில் இடிந்து போய் விட்டன.












Click it and Unblock the Notifications