சரத் பவாரை தள்ளிவிட்ட ஆஸி. அணியினர்
மும்பை:சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பரிசளிப்பு விழாவின்போது மத்தியஅமைச்சரும், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவருமான சரத் பவாரை ஆஸ்திரேலியகிரிக்கெட் வீரர்கள் தோள்பட்டையைப் பிடித்து தள்ளி விட்டது மிகவும்கண்டனத்துக்குரிய செயல் என்று மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்,சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மினி உலகக் கோப்பை கிரிக்கெட் என வர்ணிக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பைகிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்றது.
வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவரும்,மத்திய அமைச்சருமான சரத் பவார் கோப்பையை பரிசாக வழங்கினார்.
கோப்பையைப் பெற்ற ஆஸ்திரேலிய அணியினர் (இப்போதுதான் முதல் முறையாகஇதை பெறுகின்றனர்) மேடையில் நின்றிருந்த சரத் பவாரை வேகமாக கீழிறங்குமாறுகூறி, தோள்பட்டையைப் பிடித்து தள்ளி விட்டனர். இதையடுத்து அவர் கீழே இறங்கிச்சென்று விட்டார். அதன் பின்னர் புகைப்படக்காரர்களுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள்போஸ் கொடுத்தனர்.
ஆஸ்திரேலிய வீரர்களின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின்மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரானசரத் பவாரை தோளைப் பிடித்து தள்ளி விடுவது போல விரட்டியது மிகவும்கண்டனத்துக்குரிய செயல் என்று கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், இதை நான் தொலைக்காட்சியில் பார்க்கவில்லை. அப்போதுபயணத்தில் இருந்தேன். ஆனால் எனது நண்பர்கள் நடந்தது குறித்து தெரிவித்தனர்.இது தேவையில்லாத, வருத்தத்துக்குரிய செயல். இப்படி அவர்கள் நடந்திருக்கக்கூடாது.
என்னதான் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் ஆர்வம் இருந்தாலும் கூடநாகரீகமாக நடந்திருக்க வேண்டும். ஆனால் அதை அவர்கள் மீறி விட்டனர் என்றார்.
இதேபோல மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்க்கும் ஆஸ்திரேலிய அணிக்குகண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், அக்காட்சியை நான்தொலைக்காட்சியில் பார்த்தபோது அதிர்ந்தேன். நாட்டின் மூத்த தலைவர்களில்ஒருவரான சரத் பவாரை ஆஸ்திரேலிய வீரர்கள் நடத்திய விதம் கடும்கண்டனத்துக்குரியது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications