உலக கோப்பை-இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே
கொழும்பு:உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி முடியும் வரை இலங்கை அணியின் கேப்டனாக மஹிள ஜெயவர்த்தனேநியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் ஜெயவர்த்தனே. சமீப காலமாக இலங்கை அணியைவெற்றிப் பாதையில் கம்பீரமாக அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார். அத்தோடு பொறுப்பான கேப்டனாகதானும் சிறப்பாக விளையாடி வருகிறார்.
சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சிறந்த கேப்டனாகவும் ஜெயவர்த்தனே தேர்வு செய்யப்பட்டுவிருதளித்து கெளரவிக்கப்பட்டார்.
ரெகுலர் கேப்டனான மர்வான் அட்டப்பட்டு காயமடைந்திருந்த காரணத்தால் இடைக்கால கேப்டனாகத்தான்ஜெயவர்த்தனே முதலில் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரது சிறப்பான ஆட்டம், அணியின் வெற்றிஅணிவகுப்பும் சேர்ந்து ஜெயவர்த்தனேவை உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான அணியின்கேப்டனாகவும் மாற்றியிருக்கிறது.
இதனால் முழு நேர கேப்டனாக ஜெயவர்த்தனே நியமிக்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பை போட்டிகள் முடியும்வரை ஜெயவர்த்தனேவை கேப்டனாக நியமித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழுஅறிவித்துள்ளது.
இதுகுறித்து குழுத் தலைவர் அசந்த டி மெல் கூறுகையில், கேப்டனாக பொறுப்பேற்றது முதல் சிறப்பாகசெயல்பட்டு வருகிறார் ஜெயவர்த்தனே. எனவே அடுத்த ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளஉலகக் கோப்பைப் போட்டிகள் வரை அவர் கேப்டனாக நீடிப்பார் என்றார் மெல்.
ஜெயவர்த்தனேவின் ஒரு நாள் கிரிக்கெட் ரன் குவிக்கும் சராசரி 46 சதவீதமாகவும், டெஸ்ட் சராசரி 62சதவீதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகும் கூட அவரது பேட்டிங் திறமையில்இறக்கம் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கான டெஸ்ட் தொடரில் உலகின் நான்காவது அதிகபட்ச ஸ்கோரான 374ரன்களைக் குவித்து சாதனை படைத்தார் ஜெயவர்த்தனே என்பது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications