கன மழையால் ஸ்தம்பித்தது தமிழகம்
சென்னை:தமிழகம் முழுவதும் இன்று பெய்து வரும் கன மழையால் மாநிலத்தின்பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை ஸ்தம்பித்தது.
தமிழகத்திற்கும், ஆந்திராவுக்கும் இடையே வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்தகாற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இதனால்தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்துவந்தது.
மதுரையிலும் சுற்றுப் பகுதிகளிலும் நேற்றிரவு கன மழை பெய்தது. நேற்றிரவு மட்டும் 61.5 மி.மீ. மழைபதிவாகியுள்ளது. இது இந்த ஆண்டிலேயே மதுரையில் பெய்த அதிகபட்ச மழையாகும்.
அதே போல இன்று காலை முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன மழைகொட்டித் தீர்த்தது. குறிப்பாக சென்னை, கோவை, சேலம், திருநெல்வேலி,ராமநாதபுரம், கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் பெரும்பாலானபகுதிகளில் பலத்த மழை பெய்தது.
தென் தமிழகத்தில்தான் அதிக அளவிலான மழை பெய்துள்ளது. புதுச்சேரியிலும்பரவலாக பலத்த மழை பெய்தது. இந்த மழை அடுத்த 48 மணி நேரத்திற்கு நீடிக்கும்என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
சென்னை நகரில் பெய்த கன மழையால் தலைநகரம், தண்ணீர் நகரமாக மாறியுள்ளது.நகரின் பெரும்பாலான பகுதிகளிலும் தண்ணீர் ஆறு போல ஓடி வருகிறது. தாழ்வானபகுதிகளில் வெள்ளம் என மழை நீர் தேங்கிக் கிடப்பதால் மக்கள் பெரும்அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கோவை, திருப்புவனம், ஸ்ரீவில்லிபுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், திருச்செந்தூர்சிவகாசி, திருப்பூர், பொள்ளாச்சி, பேரையூர், காங்கேயம், நாகர்கோவில், மதுரை,சங்கரன்கோவில், அம்பாசமத்திரம், ராஜபாளையம் ஆகிய இடங்களில் அதிகபட்சமாகமழை பெய்தது.
வைகையில் வெள்ளம்:
மதுரை சுற்றுப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் இப் பகுதிகளின் குளங்கள், சிற்றாறுகள், கண்மாய்கள் நிரம்பி வழிகின்றன. இந்தமழையால் வைகை அணைக்கும், முல்லைப் பெரியாறு அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
வைகை அணையின் நீர் மட்டம் 68 அடியாக உயர்ந்துவிட்டது. இந்த அணையின் அதிகபட்ச நீர் மட்டம் 71 அடி தான். இப்போது அணைக்கு அதிக அளவில் நீர்வந்து கொண்டிருப்பதால் வினாடிக்கு 1,800 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இதனால் வைகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரங்களில் வசிப்போருக்கு முதல் நிலை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மழையும் நீர் வரத்தும் அதிகமானால் அணை முழுவதுமாக திறந்துவிடப்படும்.
இதனால் வைகை கரையோரங்களில் வசிப்போர் பாதுகாப்பு இடங்களுக்குச் சென்றுவிடுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதே போல முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 134.20 அடியாக உள்ளது. இந்த அணையில் 136 அடிக்கு மேல் நீரைத் தேக்க கேரள அரசுமறுத்து வருகிறது. இதனால் இந்த நீரும் திறந்துவிடப்பட்டால் பெரியாறு ஆற்றின் கரையோர பகுதிகளிலும் வெள்ள அபாயம் ஏற்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications