துபாய்-மனைவியை கொன்று இந்தியர் தற்கொலை
துபாய்:துபாயில் கள்ளக் காதலில் ஈடுபட்ட மனைவியையும், இரண்டு வயது மகளையும் படுகொலை செய்தமும்பையைச் சேர்ந்த இளைஞர், தானும் தற்கொலை செய்து கொண்டார்.
மும்பையைச் சேர்ந்தவர் குமார் ஆச்சார்யா வாசுதேவன். 33 வயதாகும் இவர் துபாயில் பணியாற்றி வந்தார்.இவரது மனைவி லின்னெட் அல்மெய்தா. இருவரும் நீண்ட காலம் காதலித்துப் பின்னர் திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்களுக்கு 2 வயதில் மகள் உள்ளார்.
மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் திடீர் புயலாக கள்ளக் காதல் நுழைந்தது. குமாரின்மனைவிக்கும், இன்னொருவருக்கும் இடையே கள்ளக் காதல் உருவானது. இதை அறிந்த குமார் மிகுந்த அதிர்ச்சிஅடைந்தார். தான் தீவிரமாக நேசித்த மனைவி, இன்னொருவர் மீது பிரியம் காட்டியது அவருக்கு பெரும்அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து லின்னெட்டை அவர் கயிற்றால் கழுத்தை நெகித்துக் கொலை செய்தார். பின்னர் தனது மகளைதலையணையால் முகத்தை அழுத்திக் கொலை செய்தார். இதைத் தொடர்ந்து தான் வசித்து வந்த 10வதுமாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுதி வைத்த 3 கடிதங்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில், நான்எனது மனைவியை மிகவும் நேசித்தேன். ஆனால் அவரோ இன்னொருவரிடம் மனதைப் பறிகொடுத்தார். இதைஎன்னால் ஏற்க முடியவில்லை.
எனவேதான் எனது மனைவியைக் கொலை செய்தேன். நானும் உயிரை மாய்த்துக் கொள்கிறேன். இதன் மூலம்மரணத்திற்குப் பிறகும் எனது மனைவியுடன் அன்போடு இருக்கப் போகிறேன் என்று எழுதி வைத்துள்ளார்குமார்.
குமாரின் தாயார் மற்றும் சகோதரர் ஆகியோரும் அதே பகுதியில்தான் வசித்து வருகின்றனர். குமார், அவரதுமனைவி, குழந்தை ஆகியோரின் உடல்கள் மும்பைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications