ஜெகஜால ஜெயலட்சுமிக்கு ஒரு வழக்கில் ஜாமீன்
மதுரை:முன்னாள் டி.எஸ்.பி. ராஜசேகரின் மனைவி விசாலாட்சி தற்கொலை வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டஜெயலட்சுமிக்கு அந்த வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது. இருப்பினும் மற்ற வழக்குகளில் அவருக்கு ஜாமீன்கிடைக்காததால் அவரால் சிறையிலிருந்து விடுதலை ஆக முடியாது.
திண்டுக்கல் டிஎஸ்பியாக ராஜசேகர் இருந்தபோது அவரை ஜெயலட்சுமி திருமணம் செய்து கொண்டார். இதைஅறிந்த ராஜசேகரின் மனைவி விசாலாட்சி தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக திண்டுக்கல் நீதிமன்றத்தில் ராஜசேகருக்கும், ஜெயலட்சுமிக்கும் வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கில் இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இருவரும் சிறையில்அடைக்கப்பட்டனர். ஜெயலட்சுமி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.இந்த வழக்கில் ராஜசேகர் ஏற்கனவே ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.
இதற்கிடையே ஜெயலட்சுமி தனக்கு வழங்கிய தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி செல்வம், ஜெயலட்சுமிக்குவழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தும், ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டார்.
இருப்பினும் நகை மோசடி வழக்கில் ஜெயலட்சுமிக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. எனவே அவரால்விடுதலையாகி வெளியே வர முடியாத நிலை உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications