எஸ்.ஐ புரமோஷனுக்கு எழுத்து தேர்வு ரத்து
சென்னை:தலைமைக் காவலர்களாக இருந்து துணை ஆய்வாளர்களாக பதவி உயர்வுபெறுவதற்கு இருந்து வரும் எழுத்துத் தேர்வு முறை ரத்து செய்யப்படுவதாக தமிழகஅரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை விவரம்:
சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதங்களுக்கு 30.8.2006 அன்றுமுதல்வர் கருணாநிதி பதிலளித்துப் பேசுகையில், தமிழ்நாடு காவல்துறை சார்புப் பணிசிறப்பு விதியின்படி எழுத்துத் தேர்வையும் அதில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற்பயிற்சி தேர்வுகள் உள்ளிட்ட நேரடித் தேர்வுகளையும், சரக பதவி உயர்வுக்கானவாரியம் நடத்தி வருகிறது.
அதில் தேர்ச்சி பெற்ற தலைமைக் காவலர்களுக்கு உதவி ஆய்வாளர்களாக (உள்ளூர்மற்றும் ஆயுதப் படை) பதவி உயர்வு அளிக்கும் முறை தற்போது உள்ளது.
காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணிக்குக் கீழே உள்ள பதவிகளுக்கோ, உதவிஆய்வாளர் பணிக்கு மேல் உள்ள பதவிகளுக்கோ இத்தகைய பதவி உயர்வுக்கானதேர்வுகள் நடத்தப்படுவதில்லை.
எனவே தலைமைக் காவலர் மட்டுமே பதவி உயர்வுக்கான தேர்வுகளை தற்போதுஎழுதி வருகின்றனர். இந்தப் போக்கு தலைமைக் காவலர்கள் மத்தியில் அதிருப்தியைஏற்படுத்தியுள்ளது.
பணி மூப்பு மற்றும் பணிப் பதிவேடுகளை ஆதாரமாகக் கொண்டு, இதரப்பதவிகளுக்கு பதவி உயர்வு அளிப்பதைப் போன்று இவர்களுக்கும் பதவி உயர்வுஅளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தலைமைக் காவலர்களிடையே நீண்ட பலஆண்டுகளாக இருந்து வருகிறது.
இதை ஏற்றுக் கொண்டு தலைமைக் காவலர் பதவியிலிருந்து உதவி ஆய்வாளராகபதவி உயர்வுக்கு நடைபெறும் தேர்வு முறையை இந்த அரசு ரத்து செய்கிறது என்றுஅறிவித்தார்.
அதை நிறைவேற்றுவதற்கு தமிழ்நாடு காவல் சார்புப் பணி சட்டத்தில் தேவையானதிருத்தம் செய்யப்பட வேண்டும் என்று அரசுக்கு காவல்துறை தலைவர் (டிஜிபி)கடிதம் எழுதினார். இதை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.இதன்படி உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெறுவதற்காக, எழுத்து தேர்வு, வாய்மொழித் தேர்வு, உடற் பயிற்சித் தேர்வு ஆகியவற்றை நடத்துவதற்கு வகை செய்யும்சட்டங்கள் நீக்கப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications