வெள்ள நிவாரண நிதி: விஜயகாந்த் கோரிக்கை
சென்னை:தமிழகம் முழுவதும், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தமிழக அரசு நிவாரண நிதி உள்ளிட்டஉதவிகளைச் செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக விஜயகாந்த வெளியிட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தங்கும் வசதி இல்லாமல், வேலைக்குச் செல்ல முடியாமல், வருமானத்துக்கும் வழியின்றி அவர்கள் தவிக்கின்றனர்.அவர்களுக்கு உதவ தமிழக அரசு முன்வர வேண்டும்.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அரசு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றுபுகார்கள் வருகின்றன. அப்படிப்பட்ட புகார்களுக்கு இடம் தராமல், உரிய உணவுப் பொருட்களை வழங்கவும்,தொற்று நோய் பரவாமல் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளும் இந்த மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடன் வாங்கி பயிரிட்ட பயிர்கள்மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதால் அவர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதுதவிர சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதால் போக்குவரத்தும் பலஇடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றையும் சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரியுள்ளார் விஜயகாந்த்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications