For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்சியை அழிக்கவே மண்டபம் இடிப்பு-கேப்டன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:தேமுதிகவை அழித்து ஒழிப்பதற்காகவே எனது கல்யாண மண்டபத்தை இடிக்க திமுகவினர் துடிக்கின்றனர் என்றுநடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

விஜயகாந்த்துக்குச் சொந்தமான பிரமாண்ட ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபம் சென்னை கோயம்பேட்டில்உள்ளது. அந்தக் கல்யாண மண்டபத்தை அடுக்கு மேம்பாலம் அமைக்க கையகப்படுத்த மத்திய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.

Vijaykanth Mantabamகல்யாண மண்டபம் இடிபடலாம் என கடந்த ஆண்டு பேச்சு எழுந்தவுடனேயே அந்த இடத்தில் தனது தனதுகட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தை தொடங்கினார் விஜயகாந்த்.

மேலும் மண்டபத்தை இடிக்காமல் பாலம் கட்டுவது எப்படி என்று ஒரு மாற்று திட்ட பிளானை முதல்வர்கருணாநிதியை சந்தித்துக் கொடுத்தார். ஆனால், அந்த திட்டத்தின்படி பாலத்தை முழுமையாக அமைக்கமுடியாது என நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறிவிட்டார்.

மேலும் இன்னும் 3 வாரத்தில் மண்டபத்தை கையகப்படுத்தி பாலம் கட்டும் வேலையைத் தொடங்குவோம் எனஅறிவித்துள்ளார்.

வாழ்த்து அனுப்பிவிட்டு இடிக்க வந்த பாலு:

இந் நிலையில் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் பேசுகையில், சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு டி.ஆர்.பாலுபேசுகையில், கல்யாண மண்டபத்தை இடிக்கும் எண்ணம் இல்லை என்றார். பின்னர் மாற்றுத் திட்டம் கொடுத்தால்பரிசீலிப்போம் என்றார்.

நான் இதற்குப் பதிலளிக்கையில் கல்யாண மண்டபத்தை இடிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லைஎன்றுதான் கூறினேன். இதுவரை எனக்கு புத்தாண்டு வாழ்த்தே அனுப்பாத டி.ஆர்.பாலு ஜனவரி 1ம் தேதி எனக்குபுத்தாண்டு வாழ்த்து அனுப்பினார். அந்த வாழ்த்தின் பின்பக்கத்தில் கோயம்பேடு பால வரைபடமும்,நெடுஞ்சாலையின் வரைபடம் இருந்தது.

இந்த வரைபடத்தை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றஅதிகாரியிடம் கொடுத்து மாற்றுத் திட்டம் தயாரித்தேன். அதன்படி எனது கல்யாண மண்டபப் பகுதியில்மேம்பாலம் வரவில்லை. மாறாக தரை வழிப் பாதைதான் வருகிறது.

நான் அனுப்பிய இந்த மாற்றுத் திட்டத்தை நிராகரித்து விட்டார்கள். என்ன காரணம் என்று கூறவில்லை(விஜய்காந்த் தந்த மாற்றுத் திட்டத்தில் பாரிமுனையிலிருந்து பாடி செல்வதற்கானபாதையே இல்லை. மேலும், 40 மீட்டர் ரேடியஸ் அளவும் இல்லை என பாலுகூறியிருந்தது நினைவுகூறத்தக்கது). தொழில்நுட்பம் ஒத்துவரவில்லை என்று கூறுகிறார்கள்.அவர்களது மனம்தான் ஒத்துவரவில்லை.

இத்தனை நாள் கழித்து, சட்டசபைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் எல்லாம் முடிந்த பின்னர் இந்த முடிவைதெரிவிப்பது ஏன்?

கோவிலை இடிக்க வேண்டியது தானே?:

அடையாறு மத்திய கைலாஷ் கோவிலை இடிக்காமல் மாற்றுப் பாதையில் சாலை அமைக்க திட்டமிடவில்லையா? ஏன் அந்தக் கோவிலை இடிக்கவேண்டியதுதானே? மதுரையில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் கோவில்களை சரமாரியாக இடித்துத் தள்ளவில்லையா?

உளுந்தூர்ப்பேட்டையில், பல வருடங்களாக மக்கள் ரயில்வே மேம்பாலம் வேண்டும் என்று கேட்கிறார்கள். அதைக் கட்டிக் கொடுப்பது குறித்துஇங்கே யாரும் கவலைப்படுவதில்லை. எனது மண்டபத்தை இடித்து விட்டு குடிசை மாற்று வாரிய வீடுகளை குடிசைவாசிகளுக்காக கட்டிக் கொடுக்கப்போகிறார்களா என்றால் அதுவும் இல்லை.

வாகனங்கள் செல்லக் கூடிய சாலைப் பாலம்தானே, அதை மாற்றி அமைத்தால் என்ன குறைந்து போய் விடும்? கிழக்குக் கடற்கரைச் சாலை என்னநேராகவே சென்று கொண்டிருக்கிறது. பல இடங்களில் வளைந்து செல்லவில்லையா?

திமுகவினருக்கு ஒரு நியாயம்:

பொழிச்சலூர் பகுதியில் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் அப்பகுதியில் திமகவினர் அதிகம் என்பதால் நிலம்கையகப்படுத்திக் கொடுக்க தமிழக அரசு மறுத்து விட்டது.

இதேபோல துணை நகரம் திட்டத்தையும் கூட்டணிக் கட்சியினரின் கடும் எதிர்ப்பு காரணமாக கைவிட்டு விட்டார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறதுஎன்றால் அவர்களுக்கு தேவை என்றால் ஒன்று, இல்லாவிட்டால் ஒன்று.

நாங்கள் சட்டசபைத் தேர்தலில் அதிக வாக்குகளை வாங்கினோம். உள்ளாட்சித் தேர்தலிலும் கூடுதல் வாக்குகள் வாங்கியிருக்கிறோம். இப்படியேவிட்டால் விஜயகாந்த் வளர்ந்து விடுவான், கட்சி வளர்ந்து விடும், அதற்கு அனுமதிக்கக் கூடாது என்ற எண்ணத்தில்தான் எனது மண்டபத்தையும், கட்சிஅலுவலகத்தையும் இடிக்கத் துடிக்கிறார்கள்.

காலச் சக்கரம் சுழலும்:

நமக்கு உள்ளதைப் போலவே தேமுதிகவுக்கும் பிரமாண்ட கல்யாண மண்டபம் இருக்கிறதே என்ற எரிச்சல்தான் இந்த இடிப்பு யற்சிக்குக் காரணம்.இந்த மண்டபம் எனது உழைப்பில், மற்றவர்களிடம் கடன் வாங்கிக் கட்டியது. இதை ஏன் நான் இழக்க வேண்டும்?

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் தைரியத்தில் அவர்கள் பேசுகிறார்கள். காலச்சக்கரம் இப்படியே இருந்து விடாது. சுற்றிக் கொண்டேஇருக்கும். அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் விஜயகாந்த்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X