தலித் பஞ். தலைவர்களுக்கு நாளை பாராட்டு
சென்னை:பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம், கொட்டக்காச்சியேந்தல் ஆகிய நான்கு தலித் பஞ்சாயத்துக்களின்தலைவர்கள் மற்றும் ஊர் மக்களுக்கு சென்னையில் நாளை முதல்வர் கருணாநிதி தலைமையில் பாராட்டு விழாநடைபெறவுள்ளது.
மேற்கண்ட நான்கு தலித் பஞ்சாயத்துக்களுக்கும் நீண்ட காலமாக தலைவர் தேர்வு செய்யப்பட இயலாத சூழ்நிலைநிலவியது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது இந்த நான்கு பஞ்சாயத்துக்களுக்கும்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து தேர்தலை சுமூகமாக நடத்த உதவிய ஊர் மக்களைப் பாராட்டும் வகையிலும், தலித் பஞ்சாயத்துத்தலைவர்களை கெளரவிக்கும் வகையிலும் சென்னையில் நாளை பாராட்டு விழாவுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பில் நடைபெறும் இந்த விழாவுக்கு சமத்துவ பெருவிழா என்று முதல்வர் கருணாநிதியின்விருப்பப்படி பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த விழாவில், நான்கு தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள், அவர்களின் குடும்பத்தினர், நான்கு ஊர் மக்கள்,மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக இன்று இரவு மதுரையிலிருந்து சிறப்பு ரயிலில் இவர்கள்சென்னைக்குக் கிளம்புகிறார்கள். இரவு 11 மணிக்கு இந்த ரயில் மதுரையிலிருந்து கிளம்புகிறது.
நாளை அதிகாலை 4.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும் இவர்களுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர்மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் அனைவரும் ஓய்வெடுக்கின்றனர். மாலை 5 மணிக்கு கலைவாணர் அரங்கில் பாராட்டு விழாநடைபெறுகிறது. முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். கூட்டணிக் கட்சித் தலைவர்களான டாக்டர்ராமதாஸ், வரதராஜன், தா. பாண்டியன், திருமாவளவன், காதர் மொஹைதீன், பூவை. ஜெகன் மூர்த்திஉள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசுகின்றனர்.
தி.க.தலைவர் கி.வீரமணி, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துவார்கள். மதுரைமாவட்ட ஆட்சித் தலைவர் உதயச்சந்திரன் நன்றி நவில்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications