இந்தியாவிலிருந்து செல்லும் யுஎஸ், ஐரோப்பிய விமானங்களுக்கு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:இந்தியாவிலிருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களை கடத்தித் தகர்க்கப்போவதாக அமெரிக்காவில் உள்ள இன்டர்நெட் மையத்திற்கு வந்த இமெயில் மிரட்டலால் சென்னை உள்படஇந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் நேற்று இரவு பெரும் பீதி ஏற்பட்டது.

அமெகிக்காவில் உள்ள ஒரு இன்டர்நெட் மையத்திற்கு இந்திய நேரப்படி நேற்று இரவு 8 மணிக்கு ஒரு மிரட்டல்இ மெயில் வந்தது. அதில், இந்திய விமான நிலையங்களிலிருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குபுறப்படும் விமானங்கள் கடத்தப்பட்டு நடு வானில் தகர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மிரட்டல் மெயில் குறித்து அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ.க்கு தெரிவிக்கப்பட்டது.உடனடியாக இந்திய புலனாய்வு நிறுவனமான ஐ.பி.யை, எப்.பி.ஐ. உஷார்படுத்தியது.

இதைத் தொடர்ந்து இந்திய விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ஐ.பி. அறிவுறுத்தியது.குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படும் சென்னை, மும்பை, டெல்லிஆகிய விமான நிலையங்களில் பன்மடங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

நேற்று இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து பிராங்க்பர்ட், பாரீஸ், லண்டன் கிளம்பிய விமானங்களில்தீவிர சோதனை நடத்தப்பட்டது. பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

மறு உத்தரவு வரும் வரை இந்த விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு நீடிக்கும் என மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+