பிரதமர் பாதுகாப்பு: போலீஸ் கமிஷனர் இடமாற்றம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:திருவனந்தபுரத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் வந்தபோது பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாகதிருவனந்தபுரம் காவல்துறை ஆணையர் உள்ளிட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கைஎடுக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமர் மன்மோகன் சிங் திருவனந்தபுரம் வந்திருந்தபோது அவரது பைலட் கார் தவறான பாதையில் சென்றதால்பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பைலட் கார் டிரைவர் கைது செய்யப்பட்டார். சம்பந்தப்பட்ட பகுதிகாவல்துறை இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த பாதுகாப்பு குளறுபடி குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.விசாரணை முடிவடைந்து அதுதொடர்பான அறிக்கை முதல்வர் அச்சுதானந்தனிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் சில நடவடிக்கைகளை கேரள முதல்வர் அச்சுதானந்தன் எடுத்துள்ளார். அதன்படிதிருவனந்தபுரம் காவல்துறை ஆணையர் மனோஜ் ஆபிரகாம் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய ஆணையராகடிஐஜி பத்மகுமார் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐஜி (பாதுகாப்பு) சந்திரசேகரனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் காத்திருப்போர் பட்டியலில்வைக்கப்பட்டுள்ளார். அவரது பொறுப்பில் விஜய் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் மீது துறை ரீதியிலான விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனசெய்தியாளர்களிடம் முதல்வர் அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+