உள்ளாட்சி தேர்தலில் தவறு நடந்துள்ளது: ப.சி
காரைக்குடி:உள்ளாட்சித் தலைவர் தேர்தலில் தவறு நடந்துள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அந்தந்தகட்சிகளுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
காரைக்குடிக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலில் எங்களது கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.
திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தது முதல் சொன்ன வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றி வருகிறது.அத்தோடு அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவற்றையும் முறையாக நிறைவேற்றவேண்டும்.
உள்ளாட்சித் தேர்லில் தலைவர் தேர்தலில் பெரும் தவறுகள் நடந்துள்ளன. இதற்கு ஒரு கட்சி, இரு கட்சி என்றுபிரித்துக் குறை கூற முடியாது. அனைத்துக் கட்சிகளுமே பொறுப்பேற்க வேண்டும். நமது பகுதியிலும் குறைகள்உள்ளன.
தவறு செய்தவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பது மட்டும் போதுமானதாக இருக்காது. கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அந்தந்த கட்சிகளுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். அப்போதுதான்பிரச்சினை சரியாகும், அதுதான் கூட்டணி தர்மம் ஆகும் என்றார் ப.சிதம்பரம்.












Click it and Unblock the Notifications