பிரியங்காவின் குழந்தைகளுக்கு தீவிரவாத மிரட்டல்
டெல்லி:நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவைவிடுதலை செய்யக் கோரி முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பிரதமர் மன்மோகன் சிங்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் பேரக் குழந்தைகளை கடத்ததீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல்குரு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது சார்பில் தாக்கல்செய்யப்பட்டுள்ள கருணை மனு குடியரசுத் தலைவர் பரிசீலனையில் உள்ளதால்தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அப்சல் குருவைத் தூக்கிலிட்டால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரத்த ஆறு ஓடும் எனபல்வேறு தீவிரவாத அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன. மேலும், பல்வேறுஅமைப்பினரும் அப்சல் குருவைத் தூக்கிலிடக் கூடாது என கோரி வருகின்றனர்.
ஆனால் பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் அப்சலை உடனடியாக தூக்கிலிட வேண்டும்என வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் அப்சல் குருவை விடுதலை செய்யக்கோரி வாஜ்பாய், மன்மோகன் சிங், சோனியா காந்தி உள்ளிட்ட முக்கியப்பிரமுகர்களின் பேரக் குழந்தைகளை கடத்திச் செல்ல தீவிரவாதிகள்திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் பள்ளிக்குச் செல்லும்போது கடத்திச் சென்று பிணையக் கைதிகளாக வைக்கதீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை, மத்திய அரசைஎச்சரித்துள்ளது. இதை மத்திய அரசு சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளது.
இதுகுறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தலைமையில் அவசரஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மன்மோகன் சிங், சோனியா ஆகியோரின் பேரக்குழந்தைகளுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க அப்போது முடிவு செய்யப்பட்டது.சோனியா காந்தியின் மகள் பிரியங்காவுக்கு 7 வயதில் ஒரு மகன், 5 வயதில் ஒருமகள் உள்ளனர்.
தற்போது தங்களது பாட்டி, தாயாருக்கு வழங்கப்படுவதைப் போல இவர்களுக்கும்இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது.இனிமேல் இவர்கள் எங்கு சென்றாலும் இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்படும்.
இதேபோல பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள், மருமகன், பேரக் குழந்தைகள்,வாஜ்பாயின் பேரக் குழந்தைகள், எதிர்க்கட்சித் தலைவர் அத்வானியின் மகன், மகள்ஆகியோருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications