மும்பை: கார் மோதி 6 தொழிலாளர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

மும்பை:மும்பை புறநகர் பகுதியான பாந்த்ரா அருகே சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில்,6 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாயினர்.

பாந்த்ரா அருகே உள்ள உள்ள குடிசைப் பகுதிகளில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்தஏராளமான கூலித் தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். சாலையோரம் இவர்கள் குடிசைகளைப்போட்டு அங்கு தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை 3.45 மணிக்கு அதி வேகமாக வந்த டொயோட்டோ கொரல்லா கார் ஒன்றுதாறுமாறாக ஓடி, பிளாட்பாரத்தில் ஏறி, குடிசைக்குள் மோதி நின்றது.

இதில் பிளாட்பாரத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். இவர்களில்தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் அடங்குவர். 10 பேர் படுகாயமடைந்தனர். உயிருக்கு ஆபத்தானநிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காரை தாறுமாறாக ஓட்டி விபத்துக்குள்ளாக்கிய அலிஸ்டைர் பெரைரா உள்ளிட்ட காரில் இருந்த 6 பேரையும்போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் பார்ட்டி ஒன்றுக்குப் போய் விட்டு வந்துள்ளனர்.அனைவரும் குடிபோதையில் இருந்துள்ளனர்.

குடிபோதையில் காரை ஓட்டியதால்தான் விபத்து ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் 18 முதல் 20 வயதுக்குள்தான்இருக்கும். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் அவர்களில் காரை ஓட்டியபெரைராவை மட்டும் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்தனர். மற்றவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இதே பகுதியில்தான் சில ஆ ண்டுகளுக்கு முன்பு இந்தி நடிகர் சல்மான் கான் வேகமாக கார் ஓட்டி வந்துஒருவரைக் கொன்றார் என்பது நினைவிருக்கலாம். நேற்று நடந்த சம்பவம் மும்பை குடிசைவாசிகளிடையேபெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+