5 மீனவர்கள் மாயம்: அதிமுக போராட்டம்
சென்னை:கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று இன்னும் கரைக்குத் திரும்பாத சென்னை காசிமேட்டைச் சேர்ந்த ஐந்துமீனவர்களை மீட்கும் முயற்சியில் திமுக அரசு மெத்தனம் காட்டி வருவதாக கூறியும் அதைக் கண்டித்து அதிமுகசார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த மாதம் 22ம் தேதி காசிமேட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்களில் 5பேரைத் தவிர மற்றவர்கள் கரைக்குத் திரும்பி விட்டனர். காணாமல் போன ஐந்து பேரின் கதி குறித்துதெரியவில்லை.
அவர்களில் ஒருவரின் உடல் சமீபத்தில் கரை ஒதுங்கியது. மற்ற நான்கு மீனவர்கள் கதி குறித்து இன்னும் எந்தத்தகவலும் இல்லை.
இந்த நிலையில், மீனவர்கள் விவகாரத்தில், திமுக அரசு அலட்சியப் போக்கைக் கடைப்பிடித்து வருவதாகஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சமீபத்தில் குற்றம் சாட்டினார். மேலும், அதிமுக மீனவர் அணி சார்பில்,போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார்.
அதன்படி சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரே அதிமுக மீனவர் அணிச் செயலாளர்ஜெயக்குமார் தலைமையில் அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications