ஸ்டாலினுக்கு தலித் பஞ். தலைவர்கள் பாராட்டு
சென்னை:உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினின் முயற்சியால்தான் பாப்பாபட்டி உள்ளிட்டநான்கு பஞ்சாயத்தக்களுக்கும் அமைதியான முறையில் தேர்தல் நடந்து தாங்கள்தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டோம் என 4 தலித் பஞ்சாயத்துக்களின்தலைவர்களும் கூறியுள்ளனர்.
மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் மற்றும் விருதுநகர்மாவட்டம் கொட்டக்காச்சியேந்தல் ஆகிய நான்கு தலித் பஞ்சாயத்துக்களுக்கும் 10ஆண்டுகளுக்குப் பின் சமீபத்தில் தான் தேர்தல் நடத்தப்பட்டு தலித் தலைவர்கள்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த நான்கு பஞ்சாயத்துக்களின் தலைவர்களுக்கும், அந்த ஊர் மக்களுக்கும்சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந் நிலையில் பாப்பாபட்டி பஞ்சாயத்துத் தலைவர் பெரியகருப்பன், கீரிப்பட்டிபஞ்சாயத்துத் தலைவர் பாலுச்சாமி, நாட்டாமங்கலம் தலைவர் கணேசன்,கொட்டக்காச்சியேந்தர் பஞ்சாயத்துத் தலைவர் கருப்பன் ஆகியோர்செய்தியாளர்களிடம் பேசுகையில்,
10 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவர் பதவியாக காலியாக இருந்த நான்குபஞ்சாயத்துக்களுக்கும் தேர்தல் அமைதியாக நடக்க உள்ளாட்சித்துறை அமைச்சர்ஸ்டாலினே காரணம்.
இந்தப் பிரச்சினையை மேல் மட்டத்தில் பேசி ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்திநாங்கள் வெற்றி பெற காரணமாக இருந்தவர் ஸ்டாலின். இது ஒரு மகத்தான சாதனை.அவரது வழிகாட்டுதலின்படி நாங்கள் நான்கு பேரும் செயல்படுவோம்.
அரசு சார்பில் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ரூ. 20 லட்சம், திமுக சார்பில் தனியாக ரூ.5 லட்சம் என தலா ரூ. 25 லட்சம் நிதியளிப்பதாக முதல்வர் அறிவித்துள்ளதைவரவேற்கிறோம், பாராட்டுகிறோம்.
அரசு ஆலோசனைப்படி செயல்பட்டு எங்களது பஞ்சாயத்துக்களின் அடிப்படைதேவைகளை நிறைவேற்ற பாடுபடுவோம் என்றனர்.
பின்னர் நான்கு பஞ்சாயத்துத் தலைவர்களும் அமைச்சர் ஸ்டாலினை சந்தித்துப்பேசினர். அப்போது தங்களது பஞ்சாயத்துக்களின் நீண்ட கால தேவைகள் குறித்தமனுக்களையும் கொடுத்தனர்.
இந்த தலித் பஞ்சாயத்துக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு முழுஉதவியும் செய்யும் என்று அவர்களிடம் அமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications