ஈராக்கில் விஞ்ஞானிகள், 150 பேர் கடத்தல்

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்:ஈராக் தலைநகர் பாக்தாத்தில், விஞ்ஞானிகள் உள்ளிட்ட 150 பேரை போலீஸ் உடையில் வந்த அடையாளம்தெரியாத கும்பல் கடத்திச் சென்றது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.

தலைநகர் பாக்தாதின் மையப் பகுதியில் அரசுக்குச் சொந்தமான அறிவியல் ஆய்வுக் கழகம் உள்ளது. இங்குஏராளமான ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், துப்பாக்கிகள் ஏந்தியபடி அதிரடிப் போலீஸ் சீருடையில் ஏராளமானோர் இந்த அலுவலகத்திற்குஏகப்பட்ட கார்களில் வந்தனர். ஆய்வுக் கழகத்திற்குள் நுழைந்த அவர்கள் அங்கிருந்த விஞ்ஞானிகள் உள்பட150க்கும் மேற்பட்டோரை கார்களில் கடத்திக் கொண்டு பறந்தனர்.

இது ஒரு கடத்தல் என்பது சில நிமிடங்களுக்குப் பிறகுதான் தெரிய வந்தது. இதனால் பாக்தாத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் அதிரடிப்படையினரின் சீருடையில் வந்தது தீவிரவாதிகள் என ஈராக் கல்விஅமைச்சர் அபித் தயாப் கூறியுள்ளார்.

போலீஸ் உடையில் வந்து கடத்திச் சென்றவர்கள், ஷியா முஸ்லீம் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் சன்னிபிரிவைச் சேர்ந்தவர்களை மட்டும் அவர்கள் பிடித்துச் சென்றுள்ளனர் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் இதை ஈராக் உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இரு பிரிவுகளையும் சேர்ந்தவர்களும்கடத்தப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவிக்கிறது.

மொத்தம் 40 வாகனங்களில் கடத்தல்காரர்கள் வந்ததாக அதை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.பெண்களை விட்டு விட்டு ஆண்களை மட்டுமே அவர்கள் கடத்திச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விஞ்ஞானிகள் என்பதால் ஈராக் முழுவதும் பெரும் பரபரப்புநிலவுகிறது. கடத்தப்பட்டவர்களைப் பிடிக்க பாக்தாத் முழுவதும் தீவிர வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+