ஊசி போட்ட கம்பவுண்டர்; நோயாளி சாவு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிக்கு கம்பவுண்டர்ஊசி போட்டார். சிறிது நேரத்தில் அந்த நோயாளி பரிதாபமாக இறந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரதுமகன் சங்குபாணி. 45 வயதாகும் சங்குபாணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.இதையடுத்து அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
புறநோயாளிகள் பிரிவில் இருந்த டாக்டர், சங்குபாணிக்கு 3 மாத்திரைகளை கொடுத்துசாப்பிடுமாறு கூறியுள்ளார். ஆனால் அதில் சங்குபாணிக்குத் திருப்தி ஏற்படவில்லை.
அப்போது அங்கு இருந்த கம்பவுண்டர் சிவா என்பவர் நான் ஊசி போடுகிறேன்,சரியாகி விடும் என்று கூறி ஊசி போட்டுள்ளார். ஊசி போடப்பட்ட சிலநிமிடங்களிலேயே சங்குபாணி மயக்கமடைந்து கீழே விழுந்து இறந்தார்.
இதையடுத்து கம்பவுண்டர் சிவா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இறந்த சங்குபாணியின் உடலை மருத்துவமனை வளாகத்தில் வைத்து அவரதுஉறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
மருத்துவரின் அலட்சியத்தாலும், கம்பவுண்டர் போட்ட தவறான ஊசியாலும்தான்சங்குபாணி இறந்தார். இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்போதுதான் உடலை எடுத்துச் செல்வோம் என்று அவர்கள் கூறினர்.
தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும்காஞ்சிபுரம் பாமக எம்.எல்.ஏ. சக்தி கமலாம்பாள் உள்ளிட்டோரும் விரைந்து வந்துஉறவினர்களை சமாதானப்படுத்தினர்.
இது தொடர்பாக கம்பவுண்டர் சிவா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications