காதல் தோல்வியால் பெண் எஸ்ஐ தற்கொலை
மதுரை:காதல் தோல்வியால் பெண் எஸ்ஐ தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை சமயநல்லூர் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணிபுரிந்த சசி பேபி (31). இவர் மதுரை மேலஅண்ணாதோப்பு பகுதியில் வசித்து வந்தார். நேற்று காலை இவர் விஷம் குடித்து ஆபத்தான நிலையில்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கரிமேடு போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர்.இதில் சசிபேபி காதல் தோல்வியால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து சசிபேபியன் தாய் சாவித்திரி கூறியதாவது,
சசி பேபிக்கு 2000ம் ஆண்டில் எஸ்ஐ வேலை கிடைத்தது. எங்கள் மகளுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் எஸ்ஐயாகபணிபுரியும் விஜய காண்டீபனுக்கும் காதல் ஏற்பட்டது. முதலில் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தோம்.
இதனால் சில மாதங்களுக்கு முன் விஜய காண்டீபன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தார். இதனால்நாங்கள் எனது மகளின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தோம்.
ஆனால், விஜய காண்டீபனின் குடும்பத்தினர் அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய முயற்சி செய்தனர்.தனது பெற்றோரின் வற்புறுத்தலால் அவர் அந்தப் பெண்ணையே திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார்.
இந் நிலையில் நேற்று மாலை அவருக்கு நிச்சயசதார்த்தம் நடப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் மனமுடைந்தஎன் மகள் விஷம் குடுத்து தற்கொலை செய்து கொண்டுவிட்டாள் என்றார்.
இதுகுறித்து விஜய காண்டீபன் கூறுகையில்,
நாங்கள் இருவரும் ராஜபாளையத்தில் வேலை பார்த்த போது நல்ல நண்பர்களாக தான் பழகினோம். ஒரு நாள்சசி பேபி என்னிடம் வந்து என்னை திருமணம் செய்து கொள்ளும் படி கூறினார். ஆனால் நான் என் குடும்பசூழ்நிலை காரணமாக மறுத்துவிட்டேன். பின்பு நான் விருதுநகருக்கும், அவர் மதுரைக்கு மாறுதலாகி விட்டோம்.
இந் நிலையில் சில தினங்களுக்கு முன் அவர் என்னை தொர்பு கொண்டு மீண்டும் என்னை திருமணம் செய்துகொள்ளும் படி கூறினார். ஆனால் நான் மறுத்து விட்டேன். எனக்கு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் எதுவும்நடக்கவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டது துரதிர்ஷ்டவசமானது என்றார்.
ஆனால் நீங்கள் இருவரும் காதலித்தீர்கள். இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் நீங்கள் ஒரு முறைதற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறதே என கேட்டபோது பதில் கூற மறுத்து விட்டு எஸ்கேப்ஆனார்.












Click it and Unblock the Notifications