ஜப்பான்: சுனாமி அபாயம் நீங்கியது
டோக்கியோ:ஜப்பான் கடலில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்நாட்டின் சிறிய அளவிலான சுனாமிஅலைகள் தாக்கின. இனிமேல் சுனாமி அலைகள் வரக் கூடிய அபாயம் இல்லை என்று ஜப்பான் அரசுஅறிவித்துள்ளது.
ஜப்பான் கடலில், வடக்கே உள்ள குரில் தீவுக் கூட்டம் அருகே கடலுக்கடியில் நேற்று மாலை சக்தி வாய்ந்தநிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அளவு 8.1 ரிக்டராக பதிவாகியுள்ளது. சிறு சிறு தீவுகளால் ஆன தீவுக் கூட்டம்இது.
இதையடுத்து சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என பசிபிக் பிராந்திய சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்தது.வடக்கு ஜப்பான், ரஷ்யா, பிலிப்பைன்ஸ், தைவான், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் சுனாமி தாக்கக் கூடும்என எச்சரிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து ஜப்பானின் ஹோக்கைடோ, ஹோன்சு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அவசரம்அவசரமாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானமக்கள் வெளியேற்றப்பட்டதால் அந்த இரு தீவுகளும் வெறிச்சோடின.
இதேபோல ரஷ்யாவின் ஷகாலின், குரில் தீவுப் பகுதிகள், கிழக்கு கடலோர பகுதிகளில் வசித்து வந்தவர்களும்பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில் ஹோகைடோ தீவில் உள்ள நெமுரோ துறைமுகப் பகுதியில் முதல் சுனாமி அலை தாக்கியது.ஆனால் எதிர்பார்த்தபடி இது பெரிய அலையாக இல்லை. 45 செமீ உயரமே கொண்ட சிறிய சுனாமியாகஇருந்தது. இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
2வது அலை கோஷிரோ துறைமுக நகரில் தாக்கியது. இது முதல் அலையை விட பாதி அளவு உயரமே இருந்தது.அதன் பிறகு சுனாமி அலைகள் வரவில்லை.
இதைத் தொடர்ந்து நள்ளிரவுக்கு மேல் சுனாமி எச்சரிக்கையை ஜப்பான் அரசு வாபஸ் பெற்றது. இதற்கு மேல்பெரிய அளவிலான சுனாமி அலைகளுக்கு வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்கடலோரப் பகுதி மக்கள் மிகவும் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பூகம்பத்தால் இதுவரை பெரிய அளவிலான சேதமோ, உயிரிழப்போ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
பிலிப்பைன்சில் சுனாமி பீதி:
இதற்கிடையில் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி பீதி பிலிப்பைன்சிஸ் மக்களிடையேயும் பீதியை கிளப்பியது. அந்நாட்டு அரசு சுனாமி அலை குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என தெரிவித்துள்ளபோதிலும் கடலோரப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
ஜப்பானில் வடக்கே உள்ள குரில் தீவுக் கூட்டம் அருகே நேற்று மாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்துபிலிப்பைன்ஸ் மக்களுக்கு அந் நாட்டு அரசு வானெலி மூலமாகவும், செல்போன் மூலமாகவும் சுனாமி,நிலநடுக்கும் குறித்த அச்சம் கொள்ள வேண்டாம் என அறிவிக்கப்படுள்ளது. இருந்தாலும் இன்னும்அவர்களிடேயே சுனாமி பீதி நீங்கவில்லை. தொடர்ந்து இடம் பெயர்ந்து கொண்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications