மலேசியாவில் மீண்டும் தலைதூக்கும் இன துவேஷம்

Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்:மலேசியாவில் வாழும் சீன மற்றும் இந்திய இனத்தவர்களுக்கு அதிக சலுகைகள் கொடுக்க முடியாது என்றுஆளுங்கட்சியைச் சேர்ந்த மலாய் இனத் தலைவர்கள் கடுமையாக கூறியுள்ளனர்.

மலேசியாவில் பெரும்பான்மை இனத்தவராக மலாய் இனத்தவர் இருந்தாலும் சீன இனத்தவர்தான் பொருளாதாரரீதியில் நல்ல நிலையில் உள்ளனர். அத்தோடு இந்திய வம்சாவளியினரும் நல்ல நிலையில் உள்ளனர். இதனால்இவர்கள் மீது மலாய் இனத்தவர்களுக்கு நீண்ட காலமாகவே துவேஷம் இருந்து வருகிறது.

இந் நிலையில் மலேசிய ஆளுங்கட்சியான ஐக்கிய மலாய் தேசிய கழகத்தைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும்,மலேசியாவில் மலாய் இனத்தவருக்கு வழங்கப்படும் சலுகைகளையும், வசதிகளையும் கேள்வி கேட்கும் உரிமைசீன மற்றும் இந்திய இனத்தவருக்கு இல்லை. மீறி கேள்வி கேட்டால், இன மோதலைத் தவிர்க்க முடியாது என்றுஎச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதேசமயம், இக்கட்சியைச் சேர்ந்த சீன இனத்தைச் சேர்ந்த தலைவர்கள், சிறுபான்மை இனத்தவர்கள் மீதுமலேசிய அரசு பாரபட்சமாக நடப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கட்சிக்குள் எழுந்துள்ள இந்த துவேஷ சூழலின் சூட்டைத் தணிக்கும் நடவடிக்கைகளில் பிரதமர் பதாவிஇறங்கியுள்ளார். அவரது கட்சிக் கூட்டம் கோலாலம்பூரில் நடந்தது. அதில் பதாவி பேசுகையில், இன, மதரீதியிலான பிரச்சினைகள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன. இது தற்போது கவலைக்குரிய கட்டத்தைஎட்டியுள்ளது.

இதற்குப் பல காரணங்கள் உள்ளன. முன்பு மாதிரி இல்லாமல் வெளிப்படையான நிலைமை தற்போதுநிலவுவதால், இதுபோன்ற பேச்சுக்கள் அதிகரித்துள்ளன. இதனால்தான் எல்லை தாண்டும் வகையில் இதுபோன்றஉணர்ச்சிகரமான பிரச்சினைகள் சென்று கொண்டுள்ளன.

இன ரீதியான பிரச்சினைகள் கையை விட்டுப் போகும் என்ற நிலை ஏற்பட்டால் அதை தடுக்க கடுமையானநடவடிக்கைகளை எடுக்க நான் தயங்க மாட்டேன். தேவைப்பட்டால் தற்போதைய சட்டத்தை மேலும்கடுமையாக்க நடவடிக்கை எடுப்பேன். அமைதியும், ஒற்றுமையும் தான் முக்கியம் என்றார் பதாவி.

இதற்கிடையே, பிரதமர் பதாவி அரசின் கொள்கைகளை முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மது விமர்சித்துள்ளார்.பதாவி அரசில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மிகவும் மந்த கதியில் நடப்பதாக மகாதிர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கு பதாவியிடமிருந்து இன்னும் சரியான விளக்கம் வரவில்லை. 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஊழலைஒழிப்பேன் என்று சொல்லித்தான் பதாவி ஆட்சிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஊழல் ஒழிப்புநடவடிக்கை குறித்து பதாவி கூறுகையில், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.இதுதொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நீதிமன்றங்களை வலியுறுத்தியுள்ளேன்.

ஊழல் தொடர்பாக யாரும் கைது செய்யப்படாத காரணத்தால் எனது நடவடிக்கைகள் குறித்து சிலருக்கு சந்தேகம்வந்து விட்டது. ஆனால் ஊழலை உடனடியாக ஒழித்து விட முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்றார் பதாவி.

இனப் பிரச்சினை தவிர மதப் பிரச்சினையும் மலாய் மக்களிடையே புகைச்சலை கிளப்பியுள்ளது. மலாய்இனத்தவரில் பெரும்பாலானவர்கள் இஸ்லாம் மதத்தவர்கள். மலேசியாவில் இஸ்லாம் மதத்தை விமர்சிக்கும்வகையிலான விவாதங்கள் அதிகரித்து வருவதாக அவர்கள் குமுறுகின்றனர்.

மலேசியாவில் உள்ளவர்களில் 25 சதவீதத்தினர் சீன இனத்தவர், 8 சதவீதம் பேர் இந்தியர்கள். கடந்த 1969ம்ஆண்டு சீன இனத்தவர்களுக்கும், மலாய் இனத்தவர்களுக்கும் இடையே பெரும் கலவரம் மூண்டது. இதில்நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

தற்போது எழுந்துள்ள இன மற்றும் மத ரீதியிலான புகைச்சலை பதாவி எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதைமலேசிய வாழ் சீன மற்றும் இந்திய இனத்தவர்கள் கவலையுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+