யாழில் பட்டினி சாவு-உணவு அனுப்பும் இந்தியா

Subscribe to Oneindia Tamil

யாழ்ப்பாணம்:யாழ்ப்பாணத்தில் உணவு கிடைக்காததால் பட்டினியில் வாடிய 50 வயது தமிழர் பரிதாபமாக இறந்தார். இதன்மூலம் யாழ்ப்பாணம் வளைகுடாவில் பட்டினிச் சாவு கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந் நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உணவுப் பொருட்களை இந்தியாஅனுப்பி வைக்கவுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கும், இலங்கையின் பிற பகுதிகளுக்கும் இடையிலான ஏ 9 சாலையை இலங்கை அரசு மூடிவிட்டது. இதனால் யாழ். குடாவில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மருந்துப் பொருட்களுக்கும் பெரும்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் யாழ்ப்பாணம் வளைகுடாவில் உள்ள லட்சக்கணக்கான தமிழர்கள் பட்டினிச் சாவுக்கு ஆளாகியுள்ளனர்.இலங்கை அரசு வேண்டும் என்றே உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் யாழ்ப்பாணத்திற்குச் செல்லாமல்,செயற்கைப் பற்றாக்குறையை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நலையில் உணவுப் பற்றாக்குறை காரணமாக முத்தையா சந்திரபாலா என்ற 50 வயது தமிழர் பரிதாபமாகஇறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1991ம் ஆண்டுக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில்பட்டினிச் சாவு நிகழ்ந்துள்ளது இதுவே முதல் முறையாகும். ராணுவத்தின் பிடியில் உள்ள யாழ் குடாவைச் சேர்ந்தபிசாசு முனை பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா.

இதுகுறித்து பிசாசு முனை மாவட்ட நீதிமன்றத்தின் தற்காலிக நீதிபதியான நடராஜா தங்கராஜா இதுகுறித்துக்கூறுகையில், பட்டினிக்கு ஒருவர் பலியாகியிருப்பது இதுவே முதல் முறையாகும். உணவுப் பற்றாக்குறையால்தான்முத்தையா இறந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கென்று சொந்த பந்தங்கள் யாரும் இல்லை.

நிரந்தர வீடும் கிடையாது. தினக் கூலியாக வேலை பார்த்து ஜீவனம் செய்து வந்தார். நாடோடி போல வாழ்ந்துவந்தார் முத்தையா என்றார் தங்கராஜா. ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை யாழ்ப்பாணத்தில் 11,055டன் உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பற்றாக்குறையால் பரிதவித்து வரும் யாழ்ப்பாணம் மக்களின் துயரத்தை அதிகரிக்கும் வகையில்சிக்குன்குனியா காய்ச்சலும் தற்போது பரவி வருவதாக தெரிய வந்துள்ளது.

யாழ் தமிழர்களுக்கு உணவு: மன்மோகன்

இந் நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா செய்யவுள்ளதாக பிரதமர்மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் பிரதமர் மன்மோகன்சிங் கூறியிருப்பதாவது:

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் வசிக்கும் தமிழர்கள், உணவு மற்றும் மருந்துப் பொருட்களின்பற்றாக்குறையால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்ற தகவல் எனக்கு எட்டியுள்ளது. இது தொடர்பாகஉங்களின் கடிதமும் வந்தது.

அந்த மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவிகளைச் செய்யவுள்ளது. முதல் கட்டமாக 5,200மெட்ரிக் டன் அரிசி, 1,500 மெட்ரிக் டன் சர்க்கரை, 300 மெட்ரிக் டன் பால் பவுடர் உள்ளிட்டவை அங்குஅனுப்பி வைக்கப்படும்.

இலங்கை இனப் பிரச்சினையில் இந்தியா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இலங்கைத் தமிழ் குடிமக்களின்உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இந்திய அரசு அக்கறையுடன் உள்ளது. இனப் பிரச்சினைக்குராணுவ ரீதியிலான தீர்வுக்கு சாத்தியமில்லை. அமைதிப் பேச்சுவார்த்தை மூலமே இலங்கைத் தமிழர்களின்உரிமைளை உரிய அதிகாரப் பங்கீடு மூலம் நிலை நிறுத்த முடியும் என்பதில் இந்தியா தெளிவாக உள்ளது.

இருப்பினும் தற்போதைய நிலையில், முதலில் இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் மனிதாபிமான உரிமைகள்நிலை நிறுத்தப்பட வேண்டும், காக்கப்பட வேண்டும். அப்பாவித் தமிழர்கள் பலியாவது தடுக்கப்பட வேண்டும்.வரைவில் மத்திய வெளியுறவு செயலாளர் கொழும்பு செல்லவுள்ளார். இந்தியாவின் கவலையை இலங்கைஅரசிடம் அவர் தெரிவிக்கவுள்ளார்.

இலங்கையில் வசிக்கும் தமிழர்கள், பிற குடிமக்களைப் போல சம உரிமையுடன், சலுகைகளுடன் நடத்தப்படவேண்டும் என்பதை அவர் இலங்கை அரசிடம் திட்டவட்டமாக தெரிவிப்பார்.

இலங்கையில் பெண்கள், குழந்தைகள் கொல்லப்படுவதை நியாயப்படுத்த முடியாது. அடுத்த முறை நான்இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சந்திக்கும்போது இதே கவலையை உரிய முறையில் தெரிவிப்பேன் என்றுகூறியுள்ளார் மன்மோகன் சிங்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+