தமிழகத்தில் ரூ.2500 கோடியில் டாடா ஆலை
சென்னை:திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.2500 கோடி முதலீட்டில், பெயின்ட் தயாரிக்க உதவும் மூலப்பொருளான டைட்டானியம் டை-ஆக்ஸைடு தயாரிக்கும் தொழிற்சாலையை டாடா ஸ்டீல் நிறுவனம்அமைக்கவுள்ளது.
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பெருமளவில் கிடைக்கும் இல்மனைட் என்ற தாதுப் பொறுளைதோண்டியெடுத்து அதை சுத்தம் செய்து அதிலிருந்து டைட்டானியம் டை ஆக்ஸைடு தயாரிக்க டாடா ஸ்டீல்திட்டமிட்டுள்ளது.
ஆண்டுக்கு 5 லட்சம் டன் இல்மனைட்டை தோண்டியெடுக்க பூர்வாங்கத் திட்டம் வகுக்கப்பட்டது.இத்திட்டத்துக்கான ஒப்பந்தம் தமிழக அரசுக்கும் டாடா ஸ்டீலுக்கும் இடையே ஏற்கெனவே கையெழுத்தாகிஉள்ளது.
இத்திட்டம் குறித்து டாடா ஸ்டீல் நிறுவனம் விரிவான ஆய்வை மேற்கொண்டது. இல்மனைட் மூலப்பொருளில்இருந்து டைட்டானியம் டை ஆக்ஸைடு லாபகரமாக தயாரிக்க வேண்டுமானால், தொழிற்சாலைக்கு வேண்டியதண்ணீர் அப்பகுதியில் இல்லை.
எனவே கடல் நீரில் இருந்து சுத்தமான தண்ணீர் தயாரிக்க தனியாக தொழிற்சாலை அமைத்து அதைப்பயன்படுத்தலாம் என்று டாடாவின் ஆய்வில் தெரிய வந்தது.அதன் அடிப்படையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இல்மனைட் தாதுப்பொருளைத்தோண்டியெடுக்கவும் அதிலிருந்து டைட்டானியம் டை ஆக்ஸைடு தயாரிக்கவும் டாடா நிறுவனத்துக்கு உரிமம்வழங்கப்பட்டுள்ளது.
சுரங்கப் பணிகளிலும், பின்னர் சுத்திகரிப்பு பணிகளிலும் டாடா ஸ்டீல் நிறுவனத்துக்கு உதவ எம்என்.தஸ்தூர்வோ,ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டி.இசட்.எம்.ஐ ஆகிய நிறுவனங்கள் முன் வந்துள்ளன.
2008ம் ஆண்டில் டைட்டானியம் டை ஆக்ஸைடு உற்பத்தியைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்த திட்டச்செலவு ரூ.2500 கோடி ஆகும்.இந்தியாவில் ஒரு டன் டைட்டானியம் டை ஆக்ஸைடு ரூ.1 லட்சம் முதல் 1.2 லட்சம் வரை விற்கப்படுகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications