அரைத்த மாவையை அரைக்கும் கருணாநிதி: ஜெ
சென்னை:உள்ளாட்சி தேர்தலை போலவே கூட்டுறவுத் தேர்தலும் நியாயமான முறையில் நடக்காது என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரசுப் பேருந்துகளில் திருக்குறளை அழித்து விட்டு தன்னுடைய எழுத்துக்களையும், பேச்சுகளையும் பொன்மொழிகள் என்று எழுதுவதை நிறுத்திவிட்டு, திருக்குறளை எப்போது எழுதுவீர்கள் என்று கேட்டால், அரைத்தமாவையை அரைக்கிறார் கருணாநிதி.
வள்ளுவர் கோட்டத்தை தான் கட்டியதாகச் சொல்கிறார். அரசுப் பேருந்துகளில் இடம் பெற்றிருந்த திருக்குறளைஅழித்ததற்கு இதுதான் பதிலா?
சென்னை அருகே துணை நகரம் அமைக்கப்படும் என அறிவித்த போது, அதை எதிர்த்து அதிமுக போராட்டம்நடத்தும் என அறிவித்த 12 மணி நேரத்தில் அந்த திட்டத்தை கைவிட்டு விட்டார்.
அதைப் போலவே பேருந்துகளில் திருக்குறளை எழுதுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து திசை திருப்பும்முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நியாமான முறையில நடைபெறாது என்று அறிக்கைவெளியிட்டேன். அதற்கு எனது ஆட்சியிலேயே கூட்டுறவு தேர்தலை நடத்தி இருக்க வேண்டியாதுதானே எனகேள்வி எழுப்பியுள்ளார் முதல்வர்.
கூட்டுறவுத் தேர்தல் சம்பந்தமாக விரிவான விவரங்களை மக்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்.
1996ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிமுகவைச் சேர்ந்த கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் மற்றும் நடுநிலைஉறுப்பினர்களின் வாக்கு உரிமையை நீக்கி விட்டு, திமுகவினரே தலைவர் தேர்தலுக்கு போட்டியிட அனுமதித்துதேர்வும் செய்யப்பட்டனர்.
அப்படி தேர்வு செய்யப்பட்டவர்களால் கூட்டுறவு சங்கம் படு மோசமான நிலைக்கு வந்துவிட்டது. 2001ல் நான்ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுத்தேன்.
புதிய உறுப்பினர்கள் வாக்களிக்க கூடாது என உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்றத்தீர்ப்புக்கு பிறகு, மேல் முறையீட்டிற்காக அவ்வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. இதற்கான காலக் கட்டம்2001 முதல் 2005 வரை ஆகும். தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை வாபஸ்வாங்கிவிட்டு, அரசே தேர்தல் நடத்துவதற்கான முயற்சியை செய்வதாக தெரிகிறது.
புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படாமலேயே கூட்டுறவுத் தேர்தல் நடத்தப்படுவதால் மீண்டும் திமுகவினரே தேர்வுசெய்யப்படவுள்ளனார். ஆகவே தான் இந்த கூட்டுறவு சங்க தேர்தல் நியாயமான முறையில் நடக்காது எனஜெயலலிதா கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications