இந்திக் கோட்டைக்குள் நுழையும் தமிழ்!
மதுரை: மத்திய அரசுக்குச் சொந்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் வரலாற்றிலேயேமுதல் முறையாக, தமிழ் ஒரு விருப்பப் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது.
சென்ட்ரல் ஸ்கூல் என்று அழைக்கப்படும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயாவில்ஆங்கிலம்தான் பயிற்று மொழியாக உள்ளது. அது தவிர இந்தி, சமஸ்கிருதம் (இதைஇன்னும் வைத்திருக்கிறார்கள்) ஆகிய இரு மொழிகள் மட்டுமே பாடத் திட்டத்தில்இடம் பெற்றுள்ளன.
இந் நிலையில், தென் மண்டல கேந்திரிய வரலாற்றிலேயே முதல் முறையாக தமிழும்இப்போது விருப்பப் பாடமாக இடம்பெற்றுள்ளது. மதுரையில்தான் இந்த சாதனைபடைக்கப்பட்டுள்ளது.
மதுரை கோச்சடையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழும் தற்போதுசேர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உதயச்சந்திரன்கூறுகையில்,
கேந்திரிய வித்யாலயா கல்வித் திட்ட விதிப்படி 20 அல்லது அதற்கும் மேற்பட்டமாணவர்கள் இருந்தால் மட்டுமே தாய் மொழி அல்லது பிராந்திய மொழியை சேர்க்கமுடியும். (ஆனால், தமிழை தாய் மொழியாகக் கொண்ட மாணவர்கள் போதியஎண்ணிக்கையில் இருந்தும் இதுவரை தமிழை பாடமாக சேர்க்க சென்ட்ரல் ஸ்கூல்கள்முன் வரவில்லை)
மாவட்ட நிர்வாகம் எடுத்த முயற்சியின் விளைவாக தற்போது கோச்சடை கேந்திரியவித்யாலயா பள்ளியில் தமிழ் கூடுதல் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது.
6ம் வகுப்பு முதல் 10வது வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு வாரத்தில் 3முறை தமிழ்ப் பாடம் இடம் பெறும். படிப்படியாக இதை முதல் வகுப்பிலிருந்துகற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்பதால் இந்த விருப்பப் பாடத்திற்குமதிப்பெண்கள் கிடையாது. தமிழ்ப் பாடத்தை கற்பிப்பதற்கு ஆகும் செலவைமாவட்ட நிர்வாகமே பள்ளி நிர்வாகத்திற்கு வழங்கும்.
கேந்திரிய வித்யாலாய வரலாற்றிலேயே பிராந்திய மொழி ஒன்று கற்பிக்கப்படுவதுஇதுவே முதல் முறையாகும்.
திருப்பரங்குன்றத்தில் கேந்திரிய வித்யாலயாவின் கூடுதல் கட்டடங்களுக்காக 10ஏக்கர் நிலத்தை மாநில அரசு ஒதுக்கியுள்ளது என்றார் உதயச்சந்திரன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications