கூட்டணி அமைக்க தடை வேண்டும்: விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்க தடை விதித்து சட்டம் கொண்டு வர வேண்டும் என தேமுதிக தலைவர்விஜயகாந்த் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள், பிரமுகர்கள் காஞ்சிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த்முன்னிலையில் தேமுதிகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசுகையில்,

நான் கட்சி ஆரம்பிக்கப் போவதாக கூறியபோது, சிலர் நினைத்தனர். நான் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணிஅமைப்பேன் என்று. ஆனால் நான் ஆரம்பத்திலிருந்தே கூட்டணி சேர மாட்டேன் என்று கூறி வருகிறேன்.

சட்டசபைத் தேர்தலையும், அதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலையும் தனித்தே சந்தித்தேன். உள்ளாட்சித்தேர்தலில் 20 சதவீத வாக்குகளை எனது கட்சி பெற்றுள்ளது.

என்னைப் போல, எனது கட்சியைப் போல மற்ற கட்சிகளும் தனித்து போட்டியிடத் தயாரா? அவர்களுக்குசின்னம்தான் முக்கியம். சின்னம் போனால் ஓட்டும் போச்சு.

எப்படி தேர்தலில் போட்டியிடுவோர் சொத்துக் கணக்கு காட்ட வேண்டும், வழக்கு விவரங்களை சொல்லவேண்டும் என தேர்தல் ஆணையம் சொல்கிறதோ, அதேபோல தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடக்கூடாது என்றும் ஒரு சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்.

கல்யாண மண்டபத்தை இடித்து விட்டால் எனது கட்சியை அழித்து விடலாம் என சிலர் நினைக்கிறார்கள். மனம்இருந்தால் மார்க்கம் உண்டு. சாலையை எப்படி வேண்டுமானாலும் போடலாம். ஆனால் மக்களுக்குத்தேவையென்றால் எனது கல்யாண மண்டபத்தைத் தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் உறுதியாகசொல்லி விட்டேன்.

நான் உழைப்புக்கு மரியாதை தருபவன், காசுக்கு மரியாதை கொடுக்க மாட்டேன். யாருக்காகவும் பயப்படமாட்டேன், ஓடி விட மாட்டேன். விரட்டுபவர்களை விட்டு விட மாட்டேன். யாராலும் என்னையோ அல்லதுதேமுதிகவையோ அழிக்க முடியாது. காரணம் நான் எங்கும் இல்லை, மக்கள் மனதில் இருக்கிறேன் என்றார்விஜயகாந்த்.

நிகழ்ச்சியின்போது, காஞ்சிபுரம் அருகே ரயில் விபத்தில் இறந்த ஷேர் ஆட்டோ பயணிகள் 17 பேரின்குடும்பங்களுக்கும் தலா ரூ. 10,000 இழப்பீடாக தரப்படும் என விஜயகாந்த் அறிவித்தார்.

அதேபோல வறுமையில் வாடும் சுதந்திரப் போராட்ட தியாகி விஸ்வநாததாஸின் வாரிசான அமல புஷ்பத்துக்குரூ. 25,000 நிதியுதவி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+