நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஷேர் ஆட்டோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னையில் 6 பயணிகளுடன் சென்ற ஷேர் ஆட்டோ திடீரென நடு ரோட்டில்தீப்பிடித்து எரிந்தது. டிரைவர் மற்றும் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஷேர் ஆட்டோக்கள் அதிகஅளவில் இயக்கப்படுகின்றன. இந்த ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாகபயணிகளை ஏற்றிச் செல்வதாக குற்றச்சாட்டு உள்ளது.

பல இடங்களில் ஷேர் ஆட்டோக்களால் பெரும் விபத்துக்களும் நடந்துள்ளன.சமீபத்தில் காஞ்சிபுரம அருகே ஷேர் ஆட்டோ ரயில் தண்டவாளத்தின் நடுவே சிக்கிக்கொண்டதால் அதன் மீது ரயில் மோதி 17 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இந் நிலையில் சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் நடு ரோட்டில்ஷேர் ஆட்டோ தீப்பிடித்து எரிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அசோக் பில்லர் பகுதியிலிருந்து கிண்டி நோக்கி அந்த ஷேர் ஆட்டோ 6பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஆட்டோவில்தீப்பிடித்துக் கொண்டது.

இதையடுத்து டிரைவரும், பயணிகளும் அலறி அடித்தபடி கீழே இறங்கி ஓடினர்.அடுத்த சில நிமிடங்களில் ஆட்டோ முழுவதுமாக எரிந்துவிட்டது.

தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் ஆட்டோவில்ஒரு பாகம் கூட மிஞ்சாமல் மொத்தமாக எரிந்துபோய்விட்டது.

பராமரிப்பே இல்லாத அந்த ஆட்டோவில் கேஸ் லீக் ஏற்பட்டதால் இந்த விபத்துநடந்ததாகத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+