இந்திய சிறுவனுக்கு உலக அமைதி விருது
ஹேக்:சிறார் தொழிலாளர் ஒழிப்பு மற்றும் தீரச் செயலுக்காக இந்தியாவைச் சேர்ந்த 14 வயதுசிறுவன் ஓம் பிரகாஷுக்கு சர்வதேச சிறுவர் அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷுக்கு 5 வயதாக இருந்தபோதுவிவசாயப் பண்ணை ஒன்றில் அவன் வேலைக்கு சேர்த்து விடப்பட்டான். அங்கு 3ஆண்டுகள் அவன் கொத்தடிமை போல வேலை பார்த்து வந்தான். ஒரு நாளைக்கு 2வேளைதான் சாப்பாடு கொடுக்கப்பட்டது.
கடுமையாக வேலை வாங்கப்பட்ட ஓம் பிரகாஷுக்கு சம்பளம் ஏதும்கொடுக்கப்படவில்லை. சம்பளம் கேட்டால் அடி, உதைதான் கிடைத்தது. இந்தஅடிமை வாழ்விலிருந்து பின்னர் ஓம் பிரகாஷை அதிகாரிகள் மீட்டனர்.
அதன் பின்னர் சிறார் தொழிலாளராக இருந்து தான் பட்ட அவஸ்தையை வேறு எந்தசிறுவர்களும் படக் கூடாது என்ற எண்ணத்தில், ஓம்பிரகாஷ், புதிய அமைப்புஒன்றைத் தொடங்கினான்.
ராஜஸ்தான் மாநிலத்து கிராமங்கள் முழுக்கச் சென்று அவன் சிறார் தொழிலை எதிர்த்துதீவிரப் பிரசாரம் செய்தான்.
பிரகாஷின் இந்த அயராத முயற்சியின் விளைவாக அந்தக் கிராமங்களில் சிறுவர்கள்வேலைக்கு அனுப்பப்படுவதும், வேலையில் நியமிக்கப்படுவதும் அடியோடுகுறைந்தது.
மேலும், சிறார்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. இந்தப் பிரசாரம் தவிர பிறப்புச்சான்றிதழ் வாங்கித் தரும் பணியையும் பிரகாஷ் மேற்கொண்டான்.
ஓம் பிரகாஷின், இந்த வயதை மீறிய சேவையைப் பாராட்டும் வகையில், நெதர்லாந்துநாட்டைச் சேர்ந்த அமைப்பு ஒன்று ஓம் பிரகாஷுக்கு சர்வதேச சிறுவர் அமைதிவிருதை வழங்கிக் கெளரவித்துள்ளது.
தி ஹேக் நகரில் நடந்த நிகழ்ச்சியில் நோபல் அமைதிப் பரிசை வென்ற தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர்களான நெல்சன் மண்டேலா, எப்.டபிள்யூ. டி கிளர்க்ஆகியோர் இணைந்து ஓம் பிரகாஷுக்கு அமைதி விருதை வழங்கிக் கெளரவித்தனர்.இந்த விருது 1 லட்சம் அமெரிக்க டாலர்களைப் பரிசுத் தொகையாகக் கொண்டதாகும்.
நெதர்லாந்தைச் சேர்ந்த சிறுவர் உரிமைகள் என்ற அமைப்பு இந்த சர்வதேச சிறார்அமைதி விருதை கடந்த ஆண்டு முதல் வழங்கி வருகிறது. 2வது ஆண்டு விருதுதான்பிரகாஷுக்குக் கிடைத்துள்ளது.
நிகழ்ச்சியில் ஓம் பிரகாஷ் பேசுகையில், குழந்தைகளின் கவலைகள், உரிமைகளைபெரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும், அவர்களைப் புறக்கணிக்கக் கூடாது.
எங்களுக்கும் உரிமைகள் உள்ளன. அவற்றை அனைவரும் புரிந்து மதிக்க வேண்டும்.எங்களது உரிமைகள் கேட்கப்படாமல் போகும்போது அதை பெற நாங்கள்போராடவும் தயங்க மாட்டோம் என்றான் பிரகாஷ்.
பின்னர் பிரகாஷைக் கெளரவிக்கும் வகையில் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள டாம்சதுக்கம் என்ற இடத்தில் திறந்த வெளி இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
இந்தியாவில் 1.2 கோடி சிறார் தொழிலாளர்கள் இருப்பதாக கணக்கு ஒன்றுதெரிவிக்கிறது. கடந்த அக்டோபர் 14ம் தேதி முதல் இந்தியாவில் சிறார்களைவேலைக்கு அமர்த்துவதற்கு மத்திய அரசு தடை விதிக்கப்பட்டுள்ளதுநினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications