நாங்கள் சாமியார் மடம் நடத்தவில்லை: காங்
சென்னை:தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் எங்களுக்கும் பங்கு வேண்டும், நாங்கள் சாமியார்மடம் நடத்தவில்லை என்று காங்கிரஸ் மீண்டும் குரல் கொடுத்துள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் இன்றுசென்னையில் நடந்தது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142அடியாக உயர்த்த வேண்டும்.
தமிழகத்தில் வெள்ளத் தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முடுக்கி விடவேண்டும். நிவாரணத் தொகையை உயர்த்தித் தர வேண்டும்.
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
பின்னர் சுதர்சனம் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறிய கட்சியோ, பெரியகட்சியோ, எந்தக் கட்சியாக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்திற்கு வர விரும்பும் ஆசைஅத்தனை கட்சிகளுக்கும் நிச்சயம் இருக்கும். அந்த ஆசை எங்களுக்கும் உள்ளது.நாங்கள் சாமியார் மடம் நடத்தவில்லை, கட்சிதான் நடத்துகிறோம்.
எனவே திமுக அமைச்சரவையில் காங்கிரஸுக்குப் பங்கு தர வேண்டும் என்ற ஆசைஎங்களுக்கும் உள்ளது. இதை கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளோம்.
முல்லைப் பெரியாறு அணையை வருகிற 24ம் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் குழுபார்வையிடவுள்ளது. அதன் பின்னர் 29ம் தேதி டெல்லி சென்று பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திஆகியோரை சந்தித்து இந்த விவகாரம்தொடர்பாக முறையிட முடிவு செய்துள்ளோம் என்றார்.
பின்னர் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி பேசுகையில், அமைச்சர் பதவி வேண்டும்என்ற ஆசை எங்களுக்கு உள்ளதோ, இல்லையோ கட்சித் தொண்டர்களுக்குநிறையவே உள்ளது. அந்த உணர்வை நாங்கள் மதிக்கிறோம், புறக்கணிக்க முடியாதுஎன்றார்.
முன்னதாக மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை தமிழக காங்கிரஸார் தனித்தனியாக நேற்று கொண்டாடினர். சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையிலும், புரசைவாக்கத்தில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தலைமையிலும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications