என்ஜின் கோளாறு: சென்னை திரும்பிய விமானம்
சென்னை:சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்குக் கிளம்பிய தனியார் விமானத்தில் நடுவானில்இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் சென்னைவிமான நிலையத்துக்கு திரும்பி வந்து பத்திரமாக தரையிறங்கியது.
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தைச் சேர்ந்த அந்த விமானம் நேற்று இரவு 8.45 மணிக்குசென்னையிலிருந்து கொல்கத்தாவுக்குக் கிளம்பியது. விமானத்தில் 189 பயணிகள்இருந்தனர்.
விமானம் கிளம்பி 2 மணி நேரம் பறந்த நலையில் விமான என்ஜின்களில் ஒன்றில்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டுஅறையைத் தொடர்பு கொண்ட அவர் அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார்.
இதைத் தொடர்ந்து விமான நிலையம் உஷார்படுத்தப்பட்டு அனைத்துமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து10.45 மணிக்கு விமானம் சென்னையில் தரையிறங்கியது.
பயணிகள் அனைவரும் தரையிறக்கப்பட்டனர். அவர்களில் 32 பேருக்கு விமானக்கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டது. மற்றவர்கள் நள்ளிரவுக்கு மேல் 2.30 மணிக்குபழுது நீக்கப்பட்ட பின்னர் அதே விமானம் மூலம் கொல்கத்தாவுக்குப் புறப்பட்டுச்சென்றனர்.












Click it and Unblock the Notifications