கும்பகோணம் பள்ளி தீ விபத்து ஒரு படுகொலை

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்:கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ ஒரு விபத்துச் சம்பவம் அல்ல.சொத்துப் பங்கீட்டில் எழுந்த மோதலால் நடந்த படுகொலைச் சம்பவம் என 90குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் மாவட்ட செஷன்ஸ் நீதிபதியிடம் புகார் மனுஅளித்துள்ளனர்.

கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்தில் 90 பச்சிளம் குழந்தைகள் மிகப் பரிதாமாககருகி இறந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரித்து வரும் மாவட்ட செஷன்ஸ்நீதிபதியிடம் குழந்தைகளைப் பறி கொடுத்த பெற்றோர் புகார் மனு ஒன்றைஅளித்துள்ளனர்.

அதில், கும்பகோணம் பள்ளிக் கூட தீவிபத்து சாதாரண விபத்து அல்ல.

சொத்துக்களைப் பங்கீடு செய்வதில் ஏற்பட்ட போட்டியால் குற்றவாளிகள் திட்டமிட்டுபள்ளிக்கு தீ வைத்துள்ளனர். இது ஒரு திட்டமிட்ட படுகொலைச் சம்பவம் ஆகும்.

இந்த வழக்கில் ஆஜராக அரசுத் தரப்பால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர் மீதுஎங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர் சரியாக செயல்பட மாட்டார் என நாங்கள்கருதுகிறோம். எனவே குழந்தைகளை இழந்த பெற்றோர் தங்கள் சார்பாக தனிவழக்கறிஞர்களை நியமிக்க அனுமதிக்க வேண்டும்.

புதிய வக்கீலை நியமிக்கும் வரை வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும்.மேலும் நாங்கள் குறிப்பிடும் வழக்கறிஞர்களை எங்களது சார்பாக நியமிக்கவும்அனுமதி வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+