சங்கரராமன் கொலை-கஜினி அப்புவுக்கு ஜாமீன்
சென்னை:சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி, கஜினி முகம்மது போல விடாமல்முயற்சித்து வந்த அப்புவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்கொடுத்துள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவர்அப்பு. இவர்தான் கூலிப்படையை ஏற்பாடு செய்து சங்கரராமனைத் தீர்த்துக்கட்டியதாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 முறையும், உச்சநீதிமன்றத்தில் ஒருமுறையும் அப்பு மனு தாக்கல் செய்தார்.
அத்தனை மனுக்களும் தள்ளுபடி ஆகி விட்டதால், தொடர்ந்து கடலூர் சிறையில்அடைக்கப்பட்டிருந்தார் அப்பு. இந் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 3வதுமுறையாக அப்பு ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி தணிகாச்சலம், அப்புவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிஉத்தரவிட்டார். சங்கரராமனை சதித் திட்டம் தீட்டிக் கொலை செய்ததாக கூறப்பட்டுகைதான ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட பிற எதிரிகள் ஜாமீனில்விடப்பட்டுள்ளனர்.
அதே குற்றச்சாட்டின் கீழ் அப்புவும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவருக்கும் ஜாமீன்அளித்து உத்தரவிடுகிறேன். ரூ. 1 லட்சம் சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு 2நபர் ஜாமீனை மனுதாரர் வழங்க வேண்டும்.
மேலும், கிருஷ்ணகிரியில் தங்கி மறு உத்தரவு வரும் வரை அங்குள்ள நீதித்துறைநடுவர் நீதிமன்றத்தில் ஆஜாராக வேண்டும். சாட்சிகளைக் கலைக்க மாட்டேன் எனஅந்த நீதிமன்றத்தில் மனுதாரர் உத்தரவாதப் பத்திரம் வழங்க வேண்டும் என்று நீதிபதிதனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
அப்புவின் கூலிப் படையின் முக்கிய தளபதியாக விளங்கிய கொற கிருஷ்ணா என்ற காஞ்சிபுரம் ரெளடிசமீபத்தில் போலீஸ் எண்கெளன்டரில் போட்டுத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. சங்கர்ராமன் கொலைக்கு அப்புஸ்கெட்ச் போட உதவியவர்களில் கொற கிருஷ்ணாவும் ஒருவன் என்று கூறப்பட்டது. ஆனால், அவனை வழக்கில்சேர்க்க போதிய ஆதாரம் இல்லாததால் தப்பிவிட்டான்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications