உயர்நீதிமன்றத்தில் வழக்கு மொழியாகிறது தமிழ்!!
சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் வழக்கு மொழியாக தமிழை அறிமுகப்படுத்ததமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதன்மூலம் இனி உயர் நீதிமன்றத்தில் தமிழிலும் வாதாட முடியும்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
சென்னை உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் இதுவரை ஆங்கில மொழியில் மட்டுமே நடைபெற்று,ஆங்கில மொழியே வழக்கு மொழியாகவும் இருந்து வருகிறது. அரசியல் சாசனப் பிரிவு 348ல் உயர்நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் ஆங்கில மொழியிலேயே அனைத்து நடவடிக்கைகளும் நடத்தப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
எனினும் அரசியல் சாசன சட்டம் 348ல் உட்பிரிவு 2ல் மாநில மொழிகளில் உயர் நீதிமன்ற நடவடிக்கைகள்அனைத்தும் நடைபெற குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கலாம்என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அரசியல் சாசன உட்பிரிவைப் பயன்படுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும்வழக்கு மொழியாக தாய்மொழி தமிழை அறிமுகப்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கானநடவடிக்கை முறைப்படி மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் உயர் நீதிமன்றத்தில் இனி தமிழிலேயே வழக்காட முடியும்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர்தந்த பதில்:
கேள்வி: தமிழ் தெரியாதவர்கள் (நீதிபதிகள், வழக்கறிஞர்கள்) உயர் நீதிமன்றத்தில் ஆங்கிலத்தைபயன்படுத்தலாமா?பதில்: ஆங்கிலம் மட்டும் தெரிந்தவர்களுக்கு விதி விலக்கு உண்டு.கேள்வி: உயர் நீதிமன்ற நடவடிக்கைகளை தமிழில் மாற்றினால் வழக்குகளில் தாமதம் ஏற்படாதா?பதில்: ஏற்கனவே காலதாமதம் ஏற்படவில்லையா?கேள்வி: முல்லைப் பெரியாறு உயரம் பற்றி ஏதும் பேசக் கூடாது என கேரள முதல்வர் அச்சுதானந்தன்கூறியிருக்கிறார். டெல்லியில் நடக்கும் பேச்சுவார்த்தையில் என்ன பேசப் போகிறீர்கள்?பதில்: சுப்ரீம் கோட்டை மதித்து டெல்லி சென்று பேச்சு நடத்துகிறோம். இது தொடர்பாக எதையும் யூகித்துசொல்ல முடியாது.
கேள்வி: நாங்கள் சாமியார் மடம் நடத்தவில்லை என காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் சுதர்சனம்கூறியிருக்கிறாரே?
பதில்: நான் பேச்சுரிமைக்கு என்றும் மதிப்பு அளிப்பவன்.
கேள்வி: ஆட்சியில் பங்கு என்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆசை நிறைவேறுமா?
பதில்: எனக்குத் தெரியாது.
ேகள்வி: இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மட் கட்டாயமாக்கப்படுமா?
கருணாநிதி பதில்: யோசிக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications