நாடாளுமன்றத்தில் மாறன் சிலை: ஜெ எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:நாடாளுமன்ற வளாகத்தில் மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சிலையைவைத்து நாடாளுமன்றத்தை களங்கப்படுத்தக் கூடாது என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை: நாடாளுமன்ற வளாகத்தின் உள்ளேயும், வெளியேயும்வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலை என்பது அவர்களின் நாட்டுப்பற்று,நாட்டுக்காக உழைத்தது ஆகியவற்றை போற்றும் வகையில் வைக்கப்பட்டவை.

இந்தப் பட்டியலில் உள்ள பெயர்கள் எல்லாம் வெறும் பெயர்கள் மட்டுமல்ல. நாட்டுவிடுதலையில் அவர்கள் ஆற்றிய பங்கு, சமூக விடுதலையில் தொய்வில்லாமல்ஆற்றிய பணி ஆகியவை அந்தத் தலைவர்களின் பின்னணியில் உள்ளன.

எம்.ஜி.ஆரும். அப்படித்தான் இருக்கிறார். திரையுலகில் முடி சூடா மன்னனாகவிளங்கி, தான் சேர்த்த செல்வங்களையெல்லாம் மக்களுக்கே வாரி வழங்கியவர்எம்.ஜி.ஆர். ஊழலை ஒழிக்க அதிமுகவைத் தொடங்கி, பின்னர் அகில இந்தியஅதிமுகவாக அதை மாற்றியவர்.

தமிழகத்தின் முதல்வராக 3 முறை இருந்து ஏழை, எளிய மக்களை கண் போலகாத்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் மறைந்து 19 ஆண்டுகள் ஆகியும் இன்றும் மக்கள்மனதில் நீங்கா இடம் பெற்ற பெருமகன். அவருக்கு நாடாளுமன்ற வளாகத்தில் சிலைவைக்க முடிவு செய்து, அதிமுக சார்பில் அனுமதியும் பெறப்பட்டது.

பின்னர் சிலை வடிவமைக்கப்பட்டு நாடாளுமன்றக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.இதேபோல மேலும் சில சிலைகள் அனுமதி பெறப்பட்டு அந்த சிலையோடு,எம்.ஜி.ஆர். சிலையையும் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால்கருணாநிதியின் முயற்சியால் அந்த சிலை திறப்பு நடவடிக்கை தடைபட்டது.

மத்திய அரசிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி எம்.ஜி.ஆர். சிலையைதிறக்க விடாது சதி செய்து தடுத்து விட்டார் கருணாநிதி. எம்.ஜ.ஆர். சிலையோடுசேர்த்து திறப்பதாக இருந்த அரவிந்தர், விவேகானந்தர் ஆகியோரது சிலைகள் மட்டும்அப்போது திறக்கப்பட்டது.

மாறாக, முரசொலி மாறனின் சிலையை நாடாளுமன்ற வளாகத்தில் திறக்க மத்தியஅரசை வலியுறுத்தி, மிரட்டிப் பணிய வைத்துள்ளார் கருணாநிதி. சிலை வைக்கும்அளவுக்கு மாறனின் சாதனைகள் குறைவு என்று சிலை வைக்கும் கமிட்டி கருத்துதெரிவித்தபோது, ஆட்சியே கவிழும் என மிரட்டி மத்திய அரசைப் பணிய வைத்தார்கருணாநிதி.

கருணாநிதியின் மிரட்டலால் சிலை வைப்பது தொடர்பான விதிகள்புறக்கணிக்கப்பட்டு குப்பைத் தொட்டியில் போடப்பட்டு விட்டன. எம்.ஜி.ஆரின்சாதனைகளுக்கு நிகராக மாறனின் சாதனை எதையுமே சொல்ல முடியாது.

திமுக இயக்கத்தை தங்களது குடும்பச் சொத்தாக மாற்ற முயற்சித்ததுதான் மாறன்செய்த ஒரே சாதனை. மாறனால் பேராசிரியர் அன்பழகன், நாஞ்சில் மனோகரன்ஆகியோர் அவமானப்படுத்தப்பட்டு மாநில அரசியலில் முடக்கப்பட்டனர்.

இரா. செழியன், வைகோ ஆகியோர் கட்சியை விட்டே துரத்தப்பட்டனர். இன்றுஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் வரிசையில் இடம் பெறும் அளவுக்குதனது குடும்ப செல்வ நிலையை உயர்த்தியவர் மாறன்.

கருணாநிதியின் மொழி பெயர்ப்பாளர் என்ற பணியைச் செய்ததைத் தவிர நாட்டுக்குவேறு உருப்படியான பணி எதையும் அவர் செய்ததில்லை. இப்படிப்பட்டவரின் சிலைநாடாளுமன்றத்தில் அமையவிருப்பது ஏற்கனவே அங்கு சிலைகளாக உள்ளமேதைகளுக்கு செய்யப்படும் இழுக்கு, அவமானம்.

கருணாநிதியின் மிரட்டலுக்குப் பணிந்து, இதுபோன்ற அபத்தங்களை மத்திய அரசுசெய்யக் கூடாது. அது தவறான முன்னுதாரணமாக அமைந்து, நாளைய தலைமுறைநம்மை இழிவு செய்யும். எனவே இந்த முடிவை மத்தியஅரசு மறு பரிசீலனை செய்யவேண்டும்.

மாறனுக்கு சிலை வைக்கத் துடிக்கும் கருணாநிதி, தந்தை பெரியாருக்கு நாடாளுமன்றவளாகத்தில் சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் துளியேனும் இருக்கிறதா?இதிலிருந்தே அவரது சுயநலம், குடும்ப நலத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மாறனுக்கு சிலை வைத்தே ஆக வேண்டும் என்று கருணாநிதி ஆசைப்பட்டால்அறிவாலயத்தில் வைத்துக் கொள்ளட்டும். அதுதான் மாறனுக்குப் பொருத்தமானஇடம். அதை விட்டு விட்டு நாடாளுமன்றத்தை களங்கப்படுத்தக் கூடாது.

நாடாளுமன்ற வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலையை திறக்க மத்திய அரசு உடனடியாகநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+