பாலசிங்கத்திற்கு புற்றுநோய்: தீவிர சிகிச்சை
கொழும்பு:விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் கடுமையான புற்றுநோயால்அவதிப்பட்டு வருவதாகவும், அவருக்கு லண்டனில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் செய்திகள்வெளியாகியுள்ளன.
கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ் நாளிதழான சுடரொளி இச் செய்தியை வெளியிட்டுள்ளது.
68 வயதாகும் ஆண்டன் பாலசிங்கத்திற்கு ஏற்பட்டுள்ள புற்று நோய் தீர்க்க முடியாத நிலையை எட்டிவிட்டது.அவரது கல்லீரல், நுரையீரல், எலும்பு மஜ்ஜை ஆகிய பகுதிகள் புற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.அவரது புற்று நோயின் வகை என்ன என்பது இன்னும் 2 நாட்களில் தெரிய வரும்.
லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த வியாழக்கிழமை பாலசிங்கம் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.பாலசிங்கத்திற்கு ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர். அவருக்கு சர்க்கரைவியாதியும் இதய நோயும் உள்ளது என்று அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தனது மனைவி ஆடல் ஆனுடன் லண்டனில் வசித்து வருகிறார் பாலசிங்கம்.
இலங்கைக்கு நன்கொடை நாடுகள் எச்சரிக்கை:
இதற்கிடையே, இலங்கையில் நிலவி வரும் வன்முறை, தமிழர் மீதான தாக்குதல்கள், மனித உரிமை மீறல்கள்உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் இலங்கைக்கு அளிக்கப்படும் நிதியுதவி நிறுத்தப்படும் என்று வாஷிங்டனில்நடந்த இலங்கைக்கு நிதியுதவி செய்யும் நாடுகளின் மாநாட்டில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நார்வே, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட மாநாடு வாஷிங்டனில் நடந்தது. இந்த மாநாட்டில் இலங்கையில் அதிகரித்து வரும் தாக்குதல்கள்,வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு கடும் கண்டனமும், கவலையும் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நிக்கோலஸ் பர்ன்ஸ் பேசுகையில், இலங்கை அரசும்,விடுதலைப் புலிகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடந்து வருகின்றனர். உடனடியாக இரு தரப்பினரும்சண்டையை நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும். இரு தரப்பும் தாக்குதலை நிறுத்தினால்மட்டுமே இலங்கையில் அமைதிக்கான வாய்ப்பு உருவாகும்.
தற்போதுள்ள நிலை தொடர்ந்து நீடித்தால் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டு வரும் 19 மில்லியன் டாலர்நிதியுதவி நிறுத்தப்படும் என்றார்.
நார்வே அமைச்சர் எரீக் சோல்ஹீம் பேசுகையில், இலங்கையில் அமைதியை சர்வதே சமுதாயத்தால் திணிக்கமுடியாது. இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும்தான் அதை ஏற்படுத்த முடியும். இரு தரப்பினரும் மோதலைகைவிட்டால் மட்டுமே அமைதி சாத்தியமாகும்.
தற்போது ஏற்பட்டுள்ள சிறப்பான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு இரு தரப்பும் சுமூக உடன்பாட்டைஎட்ட முயல வேண்டும். பேச்சுவார்த்தைகளால் மட்டுமே இதை சாதிக்க முடியும். மனித உரிமை மீறல்கள்,அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார்.
பின்னர் கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், யாழ்ப்பாணத்தை இணைக்கும் ஏ9நெடுஞ்சாலையைத் திறக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் மீண்டும் அமைதிப்பேச்சுவார்த்தையை தொடங்க சாத்தியக் கூறுகள் ஏற்படும்.
மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைக்கு கமிஷன் அமைக்க இலங்கை அரசு முடிவு செய்திருப்பதுவரவேற்புக்குரியது என்று கூறப்பட்டுள்ளது.
ராஜபக்ஷே வருகை-விசி உண்ணாவிரதம்
இதற்கிடையே இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியாவுக்கு வருவதை கண்டித்து வரும் 26ம் தேதி சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில்உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சிங்களப் படையினர் ஈழத் தமிழர்கள் மீது இனவெறித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.இதைக் கண்டித்து முதல்வர் கருணாநிதியிடம் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக, இந்தியாவுக்கு ராஜபக்ஷே வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 26ம் தேதி கண்டன உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications