கருணாநிதியை சந்திப்பேன்: விஜயகாந்த்
நெய்வேலி:நெய்வேலி அணல் மின் கழக ஒப்பந்த (என்.எல்.சி) ஊழியர்களின் பிரச்சினைகள்தொடர்பாக முதல்வர் கருணாநிதியை சந்திக்கப் போவதாக தேமுதிக தலைவர்விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
என்.எல்.சி.யில் வேலை பார்க்கும் 10,000 ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரம்தரம் கோரிகடந்த 14ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில்குதித்துள்ளனர். இதனால் மின் கழகத்தின் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தப் போராட்டத்திற்கு திமுக சார்பான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தவிர பிறதொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன் ஒப்பந்தஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கியுள்ளனர்.
இந் நிலையில் நெய்வேல் வந்த விஜயகாந்த் ஊழியர்களுடன் சேர்ந்து தானும்உண்ணாவிரதத்தில் பங்கேற்றார். அவருடன் அவைத் தலைவர் பண்ருட்டிராமச்சந்திரனும் கலந்து கொண்டார்.
பின்னர் உண்ணாவிரதத்தை வாழ்த்தி விஜயகாந்த் பேசுகையில், கடந்த 40ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு நிரந்தர ஊழியர்களுக்குச் சமமாக ஒப்பந்தஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு சரியான சம்பளம் இல்லை,வீடு இல்லை, எந்தவித சலுகைகளும் வழங்கப்படுவதில்லை.
தீபாவளிக்கு போனஸாக கொடுத்த ரூ. 1,500 பணத்தில் ரூ. 1,000த்தை பிடிக்கப்போவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது கொடுமையான செயல். மனிதாபிமானமற்றசெயல். இதை தட்டிக் கேட்டு உண்ணாவிரதம் இருப்பதும், போராட்டம் நடத்துவதும்நியாயமான செயல்தான்.
இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் தேமுதிக தலைவர்என்ற முறையிலும் இந்தப் போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன், உங்களுக்குக் கைகொடுக்கிறேன். இந்தப் பிரச்சினை தொடர்பாக முதல்வர் கருணாநிதியை சந்தித்து மனுகொடுக்கவுள்ளேன்.
உங்களுக்கு விரைவில் நியாயம் கிடைக்க அவரை உதவக் கேட்டுக் கொள்வேன்என்றார் விஜயகாந்த்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications