கருணாநிதியின் ஆலயம்: ஸ்டாலின் பேச்சு
சென்னை:83 வயது தள்ளாத வயதிலும் தமிழ்நாடு தள்ளாடிப் போய் விடக் கூடாது என்பதற்காகஅதிகாலை 2 மணி முதல் நள்ளிரவு வரை இடையறாது பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்முதல்வர் கருணாநிதி என உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பெரும் திரளானோர் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசுகையில்,
கலைஞர் வரவில்லையே என்ற ஏக்கத்தில் நீங்கள் இருப்பது புரிகிறது. அவருக்குதொண்டை, மூக்கடைப்பு ஏற்பட்டு பேச முடியாத நிலை உள்ளது. 10 நாட்கள் ஓய்வுஎடுக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.
அதனால்தான் அவரால் நம்மிடையே இங்கு பேச முடியவில்லை. நீங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். 83 வயதில் உடல் தளர்ந்துள்ள போதிலும், தமிழ் மக்களுக்காகதொடர்ந்து பாடுபட்டு வருகிறார். அதிகாலை 2 மணிக்கு எழுந்து தமிழகத்தைப் பற்றிசிந்திக்கிறார்.
அவருக்கு என்றும் ஆலயமாக இருக்கும் அண்ணா அறிவாலயத்திற்கு 4 அல்லது 5மணிக்கு வந்து நடைப் பயிற்சி மேற்கொள்கிறார். 6 மணிக்கு வீட்டுக்குச் சென்றுபத்திரிக்கை படிக்கிறார், பிறகு டிவி பார்க்கிறார். அதன் பின்னர் கோட்டைக்குச் சென்றுஅதிகாரிகளை சந்திக்கிறார்.
என்னென்ன பணியாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு இடுகிறார். மதியம்1 மணிக்கு அறிவாலயத்திற்கு வந்து கழக நிர்வாகிகளை சந்திக்கிறார். இரவு 10மணிக்குக் கூட அமைச்சர்களை அழைத்துப் பேசுகிறார். இப்படி ஒரு தலைவரை நாம்இதுவரை பார்த்திருக்க முடியாது.
தள்ளாடும் வயதிலும், தமிழ்நாடு தள்ளாடி விடக் கூடாது என்பதற்காகத்தான் இவ்வாறுஇடையறாது பாடுபடுகிறார்.
தலித் பஞ்சாயத்துக்களான பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம்,கொட்டக்காச்சியேந்தல் ஆகிய நான்கு பஞ்சாயத்துக்களுக்கும் எப்படியும் தேர்தல்நடந்தே ஆக வேண்டும் என கலைஞர் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும்உத்தரவிட்டார். அப்படியே நடத்தியும் காட்டியும் விட்டார் என்றார் ஸ்டாலின்.
அப்போது மிகத் தாமதமாக முதல்வர் கருணாநிதி மேடைக்கு வந்தார். கூடியிருந்தநூற்றுக்கணக்கானவர்களைப் பார்த்து அவர் கையசைத்தார். தொண்டை அடைப்புஇருப்பதால் பேச முடியவில்லை என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச்சென்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications