கருணாநிதி, அச்சுதானந்தத்துடன் காரத் பேச்சு
சென்னை:முல்லை பெரியாறு அணை விவகாரத்தை சமூகமான முறையில் பேசித் தீர்க்குமாறு கேரள முதல்வர்அச்சுதானந்தத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
பேசித் தீர்க்க வேண்டிய இந்த விவகாரத்தை அச்சுதானந்தன் தலைமையிலான இடதுசாரி அரசு ஊதிப்பெரிதாக்கி வருகிறது.
உச்ச நீதிமன்றம் தமிழகத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நிலையில் கடற்படையை விட்டு ஆய்வு செய்வது,தமிழகத்தை தாக்கி அறிக்கை விடுவது என பிரச்சனையை பெரிதாக்கி வருகிறது கேரளம்.இதை எதிர்த்து தமிழக விவசாயிகள் போராட்டத்தில் குதித்து கேரள வாகனங்களை மறித்ததாலும், கேரளாவுக்குபால், உணவுப் பொருட்கள், இறைச்சி, முட்டை, காய்கறி, பழங்களை போக விடாமல் தடுத்ததாலும் கேரளம்அதிர்ச்சியடைந்தது.
இந்த விவகாரத்தில் தமிழகத்தில் ரீயாக்ஷன் மிகவும் மோசமாக இருந்ததால், தனது கட்சியின் தலைமையிடம்சரணடைந்துள்ளது கேரள இடதுசாரி அரசு.
இதையடுத்து முதல்வர் கருணாநிதியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய தலைவர் பிரகாஷ் காரத்தொலைபேசியில் பேசினார்.
மேலும் இந்த இடதுசாரிகள், திமுகவின் ஆதரவில் மத்தியில் ஆட்சியை ஓட்டிக் கொண்டிருக்கும் காங்கிரசும்இருதலைக் கொல்லி எறும்பாய் தவித்து வருகிறது. யாருக்கு ஆதரவான நிலையை எடுப்பது என்று பரிதவிக்கும்காங்கிரஸ் மார்க்சிஸ்ட் தலைமையின் உதவியை நாடியதாகத் தெரிகிறது.
இதையடுத்து கருணாநிதியிடம் பேசிய பிரகாஷ் காரத், இந்த விவகாரத்தில் சமூகமான நிலையைகடைபிடிக்குமாறு அச்சுதானந்தத்துக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
முல்லை பெரியாறு அணைப் பிரச்னையை மைலும்சிக்கலாக்கும் வகையில் செயல்படவோ, அறிக்கைவெளியிடவோ வேண்டாம் என கேரள அரசுக்கு மார்க்ஸிஸ்ட் கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண வேண்டும் என காரத் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந் நிலையில் சாலை மறியல் போராட்டத்தை நடத்த வேண்டாம், கேரளாவுக்கு உணவுப் பொருள் சப்ளையைபாதிக்கும் வகையில் நடக்க வேண்டாம் என கருணாநிதி கோரிக்கை விடுத்ததையடுத்து விவசாயிகள்போராட்டத்தை கைவிட்டனர்.
இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையே போக்குவரத்து சீரடையத் தொடங்கியுள்ளது. இந்த சாலைமறியலால் அதிகம் பாதிக்கப்பட்டது அய்யப்ப பக்தர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவுக்குள் நுழைய முடியாமல் சாலையிலேயே தங்கள் வாகனங்களில் ஒரு நாளை கழிக்க வேண்டியநிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications