நிறுத்தி வைத்த ஜெ; தொடங்கி வைத்த ஸ்டாலின்
சென்னை:சென்னை பெரம்பூரில் கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு, அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட மேம்பாலம்கட்டும் பணியை இன்று மீண்டும் தொடங்கி வைத்தார் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின்.
1999ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் சென்னையில் மேயராக இருந்தஸ்டாலினின் மேற்பார்வையில் 10 பாலங்கள் கட்டப்பட்டன. இதில் 9 பாலங்கள் திறக்கப்பட்ட நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெரம்பூரில் 10வதாக கட்டப்பட்டு வந்த 4 வழி மேம்பால கட்டுமானப் பணியைநிறுத்தியது.
மேலும் இந்தப் பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்ததாக முதல்வர் கருணாநிதியை நள்ளிரவில் போலீசை விட்டுஇழுத்து வந்து கைது செய்தார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. அன்று இரவே ஸ்டாலின் உள்ளிட்ட பலரும்கைது செய்யப்பட்டனர்.
இந்த அரசியல் சண்டையில் பெரம்பூர் பாலம் கட்டும் பணி அம்போ என விடப்பட்டு அந்தரத்தில் தொங்கியது.இந் நிலையில் திமுக ஆட்சி வந்துவிட்ட நிலையில் இன்று இந்த பாலம் கட்டும் பணியை மீண்டும் தொடங்கிவைத்தார் ஸ்டாலின்.
குத்துவிளக்கை ஏற்றி, ஜேசிபி வாகனத்தை ஓட்டி வந்து, மணல் அள்ளி பாலம் கட்டும் பணியை தொடங்கிவைத்தார் ஸ்டாலின். இதையடுத்து நிருபர்களிடம் பேசிய அவர்,
நான் மேயராக இருந்தபோது 9 பாலங்களை கட்டினோம். பெரம்பூர் மேம்பால பணி மண் பரிசோதனைகாரணமாக தாமதமானது. இந்த நிலையில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, நினைத்திருந்தால் 8 மாதத்தில் பாலம்கட்டும் வேலையை முடித்திருக்கலாம்.
ஆனால், இதில் முறைகேடுகள் நடந்தாக பொய்யான காரணம் சொல்லி பாலம் கட்டும் வேலையை அறவேநிறுத்திவிட்டார்.
மேலும் நீதிபதி ஆறுமுகம் தலைமையில் விசாரணை கமிஷன் போட்டார்கள். 2 வருடம் விசாரித்தார்கள். ஆனால்,எங்கள் மீது எந்தக் குற்றச்சாட்டையும் கமிஷன் கூறவில்லை.
பாலம் கட்டும் பணியை நிறுத்தி வைத்ததால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 8 கோடி. 1999ல் இந்த பாலம் கட்ட ரூ.34.84 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டது. இப்போது திருத்திய மதிப்பீட்டின்படி பாலத்தை கட்டி முடிக்க ரூ.45.67 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தின் மூலம் பெரம்பூர், கொளத்தூர், பெரியார் நகர், அயனாவரம், மாதவரம் ஆகிய பகுதிகளைச்சேர்ந்தவர்கள் பலனடைவர். இந்தப் பாலத்தின் நீளம் 991 மீட்டர். அகலம், 16 மீட்டர்.
இந்தப் பால கட்டுமான பணி 8 மாதத்தில் முடிக்கப்படும் என இதைக் கட்டும் நேசனல் பில்டர்ஸ் நிறுவனம்கூறுகிறது. அதற்குள்ளாகவே கட்டி முடிக்க நடவடிக்கை எடுப்பேன்.
சேமியர்ஸ் சாலை- டர்ன்புல்ஸ் சாலை சந்திப்பு, கோபபதி நாராயண சாலை- திருமலை சாலை சந்திப்பு, வடக்குஉஸ்மான் ரோடு- எம்ஜிஆர் சாலை சந்திப்பு, உஸ்மான் ரோடு- துரைசாமி சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் 4புதிய மேம்பாலங்கள் கட்டப்படவுள்ளன. இதற்கான மண் பரிசோதனை நடந்து வருகிறது.
விரைவில் முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டுவார் என்றார் ஸ்டாலின்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications