திருப்பரங்குன்றம்-கார்த்திகை திருவிழா தொடக்கம்
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீப திருவிழாகொடியேற்றத்துடன் தொடங்கியது.
தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை கோயிலில் அனுக்ஞை பூஜையும்,வாஸ்து சாந்தியும் நடந்தது. இன்று கொடியேற்றம் நடந்தது.
இதையொட்டி உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு சிறப்புஅபிஷேகங்களும் தீபாராதனைகளும் நடந்தன. சர்வ அலங்காரத்தில் கொடிக்கம்பம்முன் சுவாமியும் தெய்வானையும் எழுந்தருளினர்.
இதையடுத்து கொடிக் கம்பத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.
10 நாள் தீபத் திருவிழாவின்போது தினமும் காலையில் சிம்மாசனம், தங்க சப்பரம்,விடையாற்றி சப்பரங்களில் சுவாமி பவனி வருவார். இரவில் தங்கமயில், தங்ககுதிரை, வெள்ளி பூதம், வெள்ளி ஆட்டுக்கிடாய், ரத்ன சிம்மாசனம், அன்னம், சேஷவாகனங்களில் சுவாமி எழுந்தருளுவார்.
டிசம்பர் 2ம் தேதி பட்டாபிஷேகமும், 3ம் தேதி காலை வைரத்தேரில் சுவாமிஎழுந்தருளும் தேரோட்டமும் நடக்கும்.












Click it and Unblock the Notifications