ராமதாஸுக்கு ஜிப்மர் போராட்டக் குழு கண்டனம்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி:புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு தன்னாட்சி தரக் கூடாது என்று கூறி போராடி வரும்மருத்துவமனை ஊழியர்களையும், புதுவை அரசியல் தலைவர்களையும் அநாகரீகமாகவிமர்சித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸக்கு எதிராக டிசம்பர் 13ம் தேதி தர்ணாபோராட்டம் நடத்தப் போவதாக ஜிப்மர் தன்னாட்சி எதிர்ப்பு மக்கள் போராட்டக் குழுதலைவர் முருகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக புதுவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜிப்மர்மருத்துவனை தற்போதைய நிலையிலேயே தொடர வேண்டும் என லோக்சபாஎதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்,மார்கிச்ஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், பொலிட்பீரோஉறுப்பினர் பிருந்தா காரத் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேபோல அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, புதுவையைச் சேர்ந்த அரசியல்தலைவர்களும் தன்னாட்சி வழங்கும் முயற்சிக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துபோராடி வருகின்றனர். பல்வேறு தொழிற்சங்கங்களும் இந்த முயற்சிக்கு எதிர்ப்புதெரிவித்து வருகின்றன.

ஜிப்மர் ஊழியர்களும் மத்திய சுகாதாரத் துறையின் இந்த முயற்சிக்கு கண்டனம்தெரிவித்து போராட்டமும் நடத்தியுள்ளனர். புதுவை தவிர தமிழகம் உள்ளிட்ட தென்மாநில ஏழை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜிப்மர் விளங்கி வருகிறது.அப்படிப்பட்ட மருத்துவமனையை தனி நபர் கல்லூரியாக மாற்றுவதை அனுமதிக்கமுடியாது.

அனைத்துத் தரப்பினரும் சேர்ந்து எதிர்த்து வரும் நிலையில் புதுவைதலைவர்களையும், ஜிப்மர் ஊழியர்களையும் மிகவும் அநாகரீகமான முறையில் பாமகநிறுவனர் ராமதாஸ் விமர்சித்துக் கொச்சையாக பேசியுள்ளார். இதை நாங்கள்வன்மையாக கண்டிக்கிறோம்.

எந்த நாயாலும் இதைத் தடுக்க முடியாது என்று ஏக வசனத்தில் பேசிய ராமதாஸைக்கண்டித்து டிசம்பர் 13ம் தேதி பாலாஜி தியேட்டர் அருகில் மாலை 4 மணிக்கு தர்ணாபோராட்டம் நடைபெறும்.

ஜிப்மர் மருத்துவமனை தற்போது உள்ள நிலையிலேயே நீடிக்க வேண்டும் எனசட்டசபையில் விவாதித்து அதை மத்திய அரசுக்குத் தெரிவிக்க முதல்வர் ரங்கசாமிநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் முருகன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+