தீர்வுக்கு கருத்தொற்றுமை அவசியம்: ராஜபக்ஷே
டேராடூன்:பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரிடையேயும் கருத்தொற்றுமை ஏற்படுவது அவசியம் என்றுஇலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு 5 நாள் பயணமாக வந்துள்ள ராஜபக்ஷே இன்று டேராடூனில் ஆசிய மேயர்கள் மாநாட்டைத்தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் தொடக்க உரையாற்றியபோது, எந்தப் பிரச்சினையாக இருந்தாலும்அதில் கருத்தொற்றுமை ஏற்படுவது அவசதியம். நிரந்தரத் தீர்வுக்கு அதுதான் சரியான வழியாகும்.
பிரச்சினைகளைத் தீர்க்க குறுக்கு வழிகளைக் கடைப்பிடித்தால் அது பலன் தராது. அது உள்ளூர் பிரச்சினையாகஇருந்தாலும் சரி, தேசியப் பிரச்சினையாக இருந்தாலும் சரி.
இலங்கையில் நிலவும் பிரச்சினைகலுக்கு தீர்வு காண எங்களை அவசரப்படுத்துகிறார்கள். இப்பிரச்சினையின்தன்மையை அவர்கள் உணரவில்லை என்பதையே இது காட்டுகிறது.
இலங்கையின் முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அனைத்துக் கட்சி அமைப்பு ஒன்றை நாங்கள்ஏற்படுத்தியுள்ளோம். அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை உருவாக்கியுள்ளோம். முக்கியஎதிர்க்கட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம்.
இனப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். ஆனால்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அனைவரும் சேர்ந்த ஒத்த கருத்தை ஏற்படுத்துவதுதான் இதில் முக்கியமானது.அப்போதுதான் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.
இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதன் மூலம் இலங்கையில் உள்ள அனைத்துத் தமிழர் கட்சிகளும்,அமைப்புகளும்பலன் அடைய முடியும்.
ஆனால் பிரச்சினைக்கு தீர்வ காண்பதில் மெத்தனம் தெரிவதாக சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். புண்பட்டுப் போனகாயம் ஆற நாள் பிடிக்கும் அல்லவா.? அதுபோலத்தான் இந்தப் பிரச்சினையும்.
இந்தியாவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ள பஞ்சாயத்து ராஜ் முறையை இலங்கையிலும்நடைமுறைப்படுத்த இலங்கை அரசு யோசித்து வருகிறது. இதன் மூலம் உள்ளூர் நிர்வாகங்களுக்கு அதிகபட்சகூடுதல் அதிகாரங்களை வழங்க முடியும்.
ஒருங்கிணைந்த இலங்கை என்ற அடிப்படைக் கொள்கையுடன், நாட்டின் அனைத்துப் பகுதியிலும்அதிகாரங்களை சமமாக பகிர்ந்து கொள்ள இந்த பஞ்சாயத்து ராஜ் முறை உதவக் கூடும்.
இன்று இலங்கையில் உள்ள அனைத்து நகரங்களிலும் பல்வேறு வகையான சமூக சூழ்நிலை காணப்படுகிறது. பலமொழி பேசுவோர், பல்வேறு மதத்தினர், பல்வேறு சமூகத்தினர் இணைந்து வாழும் நிலை உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில், அனைவருக்கும் உகந்த ஒரு தீர்வை, பரஸ்பரம் நம்பிக்கையூட்டும் ஒரு தீர்வை எடுக்கவேண்டியது அவசியம். அதற்கு அனைத்துத் தரப்பினரிடையேயும் கருத்தொற்றுமை காணப்படவேண்டியதுஅதை விட அவசியமானது என்றார் ராஜபக்ஷே.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications