கரும்பு விலையைக் குறைக்கவில்லை: அமைச்சர்
சென்னை:கரும்பு விலையை தமிழக அரசு குறைத்து விட்டதாக அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா கூறியிருப்பதில் உண்மை இல்லை என்று தமிழக வேளாண்மைத் துறைஅமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கரும்பு விலையை டன்னுக்கு ரூ.1014 என்பதிலிருந்து ரூ. 802 ஆக குறைத்து விட்டதாக அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா கூறியிருப்பதில் உண்மை இல்லை. கரும்பு விலையை திமுக அரசுகுறைக்கவில்லை என்பதே உண்மை.
கரும்புக்கான மாநில அரசின் ஆதார விலை குறித்து முத்தரப்புக் கூட்டத்தைக் கூட்டிஅதை அறிவிக்க தமிழக அரசு தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறது. கரும்புவிவசாயிகளின் நலனைக் காக்க அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுக்கும்.
சேலம் மாவட்டத்திலும் மோகனூரிலும் கரும்பு பயிர்கள் காயந்து சக்கையாகிப் போய்விட்டதாக ஜெயலலிதா கூறியுள்ளதிலும் உண்மை இல்லை. இங்குள்ள கரும்புவயல்களில் பயிரிட்டு, அவற்றை அறுவடை செய்து சர்க்கரை ஆலைகளுக்குவிவசாயிகள் அனுப்பி வைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில், கரும்பு விவசாயிகள் பெரிய அளவிலான போராட்டம்நடத்தியதாக ஜெயலலிதா சொல்வதிலும் உண்மை இல்லை.
உண்மையில், ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற பின்னர் கரும்புக்கான ஆதாரவிலையை அறிவிப்பது தொடர்பாக, சாதகமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.ஆனால் சட்டசபைத் தேர்தலில் கரும்பு விவசாயிகளின் வாக்குகளைக் கவர வேண்டும்என்ற நோக்கில், கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ. 1014 ஆகஉயர்த்தினார்.
ஆனால் திமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன், கரும்புகளை ஏற்றி வரும்வாகனங்கள் 10 கிலோமீட்டர் தொலைவுக்குள் இயக்கப்படுவதாக இருந்தால்அவற்றுக்கான வாடகையை சர்க்கரை ஆலைகளே வழங்க வேண்டும். அவற்றைவிவசாயிகளிடமிருந்து பெறக் கூடாது என முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார் என்றுகூறியுள்ளார் வீரபாண்டி ஆறுமுகம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications