பெரும் பணத்துடன் சிக்கிய கல்வி நிறுவன அதிபர்
சென்னை:டெல்லியிலிருந்து கணக்கில் வராத ரூ. 1.27 கோடி பணத்துடன் விமானம் மூலம் வந்த தஞ்சையைச் சேர்ந்த கல்விநிறுவன அதிபரை வருமான வரித் துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
தஞ்சையில் பி.ஆர். குழும் நிறுவனங்கள் என்ற பெயரில் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருபவர்முருகேசன். இவருக்கு சொந்தமாக தஞ்சையில் பொன்னையா ராமஜெயம் பொறியியல் கல்லூரி, கலைக் கல்லூரிஉள்ளிட்டவை உள்ளன.
இந்த நிலையில் டெல்லியிலிருந்து முருகேசன், கணக்கில் வராத கருப்புப் பணத்துடன் சென்னைக்கு விமானம்மூலம் வருவதாக வருமான வரித்துறைக்கு தகவல் வந்தது.
இதையடுத்து நேற்று இரவு விமான நிலையத்திற்கு விரைந்த வருமான வரித்துறை அதிகாரிகள், டெல்லியிலிருந்துவரும் விமானங்களை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, நள்ளிரவு 12.10 மணிக்கு டெல்லியிலிருந்து வந்தவிமானத்தில் முருகேசன் வந்தார்.
அவரை வளைத்துப் பிடித்த வருமான வரித்துறையினர், வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வைத்திருந்த பெட்டியில் ரூ. 1.27 கோடி பணம்இருந்தது தெரிய வந்தது. அதற்குரிய கணக்கு முருகேசனிடம் இல்லை.
இந்த நிலையில் தஞ்சையில் உள்ள முருகேசனுக்குச் சொந்தமான கல்லூரிகள், மேலும் 2 இடங்களில் இன்றுகாலை திருச்சி மண்டல வருமான வரித்துறை உதவி இயக்குநர் ராஜன் தலைமையில் அதிரடி சோதனைநடத்தப்பட்டு வருகிறது.
பெரும் பணத்துடன், கல்வி நிறுவன அதிபர் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications