தீண்டாமை ஒழிப்புக்கு தேசிய விருது
டெல்லி:தீண்டாமை ஒழிப்புக்காக பாடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனி நபர்களுக்கு ஆண்டுதோறும் தேசியஅளவில் விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தின் மக்களவையில், சமூக நீதி மற்றும் அமலாக்கத் துறை அமைச்சர் மீரா குமார்தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2007ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்படும். மொத்தம் நான்கு விருதுகள் இப்பிரிவின்கீழ் வழங்கப்படும்.
தனி நபருக்கான விருது பாராட்டுப் பட்டயம் மற்றும் ரூ. 2 லட்சம் பரிசுத் தொகையைக் கொண்டதாக இருக்கும்.நிறுவனத்திற்கு வழங்கப்படும் விருது ரூ. 5 லட்சம் பரிசுப் பணம் மற்றும் பாராட்டுப் பட்டயத்தைக் கொண்டதாகஇருக்கும்.
வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு மண்டலம் என நாட்டை நான்கு மண்டலங்களாகப் பிரித்து இருபிரிவிலும் தலா ஒரு விருது என மொத்தம் நான்கு விருதுகள் வழங்கப்படும்.
இந்தியாவைச் சேர்ந்த அனைத்து தொண்டு நிறுவனங்கள், மனித வள மேம்பாட்டு அமைப்புகள், தனி நபர்கள்விருது பெறத் தகுதி படைத்தவர்கள் ஆவர்.
விருது பெறத் தகுதி உடையவர்கள் முதல் கட்டமாக திறனறி குழுவால் தேர்வு செய்யப்படுவர். அதன் பின்னர்அவர்களிலிருந்து விருது பெறுபவர்களை தேர்வுக் குழு தேர்ந்தெடுக்கும்.
2007ம் ஆண்டுக்கான விருது பெறுவதற்கான விண்ணப்பங்களை அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரைவழங்கலாம் என்றார் மீரா குமார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications