துண்டை தூக்கி எறிவாரா கருணாநிதி-விஜய்காந்த்
போடிநாயக்கனூர்:முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக இரு மாநில மக்களும் சண்டை போட்டுக் கொள்வதால் தீர்வு கிடைக்காதுஎன்று நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நடந்த தேமுதிக தலைவர் மணியின் திருமண நிகழ்ச்சியில் விஜயகாந்த்கலந்து கொண்டு பேசினார். அப்போது, இங்கு அரசியல் பேசக் கூடாது என்றுதான் நினைத்தேன். ஆனால்முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்ந்து நீடிப்பதாலும், இது மக்கள் பிரச்சினை என்பதாலும் பேசுகிறேன்.
தமிழக மக்களுக்கும், கேரள மக்களுக்கும் இடையே சுமூகமான உறவு நீடிக்க முயற்சிகள் நடைபெற வேண்டும்.ஆனால் அனாவசியமாக ஆளுக்கொரு அறிக்கையை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். இதன் மூலம்பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படுமா என்பதை சிந்திக்க வேண்டும்.
டெல்லியில் இரு மாநில முதல்வர்கள் பேசவுள்ளனர். அதற்கு முன்பாக போராட்டம் நடத்த வேண்டுமா.?இதேபோலத்தான் தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
இரு மாநிலங்களுமே இந்தியாவில்தான் உள்ளது. நாம் ஏன் சண்டை போட வேண்டும்? புத்திசாலித்தனமாகத்தான்தீர்வு காண முயல வேண்டும். முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்தேஆக வேண்டும்.
நாங்களும் இப்பிரச்சினைக்காக போராடத் தயாராக இருக்கிறோம். ஆனால் அது அர்த்தள்ளதாக இருக்கவேண்டும். இரு மாநில மக்களுக்கும் பிரச்சினை ஏற்படாத வகையில் போராட்டம் அமைய வேண்டும். இருமாநில மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் அது இருக்க வேண்டும்.
நானும் பஸ்சை மறித்து போராட்டம் நடத்த முடியும். ஆனால் டெல்லி பேச்சுவார்த்தைக்குப் பின்னர்தான் எனதுமுடிவை நான் சொல்வேன். பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு என்பார் கருணாநிதி. இப்போதுமக்களுக்காக அந்த்த துண்டை தூக்கி தூர எறியுங்கள்.
நெய்வேலி பிரச்சினைக்கு அதி விரைவாக தீர்வு கண்டார் கருணாநிதி. அதேபோல, இரண்டரை லட்சம்விவசாயிகளின் பிரச்சினைக்கும் அவர் தீர்வு காண வேண்டாமா? இலவச டிவி கொடுத்தால் மட்டும் போதுமா?விவசாயிகளின் பிரச்சினையையும் அவர் பார்க்க வேண்டும் என்றார் விஜயகாந்த்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications