நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ரூ 2 குறைகிறது
டெல்லி:பெட்ரோல், டீசல் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளிதியோரா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கூட்டணி அரசு பதவிக்கு வந்த பின்னர் பெட்ரோல், டீசல் விலை பல முறை அதிகரிக்கப்பட்டு விட்டது.இதனால் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு தரும் இடது சாரிக் கட்சிகள் கடும் அதிருப்தியில் உள்ளன.மேலும் எதிர்க்கட்சிகளும் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில் சர்வதேச சந்தையில், கச்சா எண்ணை விலை வெகுவாக குறைந்துள்ளது. எனவே உயர்த்தப்பட்டபெட்ரோல், டீசல் விலையையும் குறைக்க வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசுஇதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வந்தது.
இதைத் தொடர்ந்து பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்காவிட்டால் நாடாளுமன்றத்தில் அதைபெரிய பிரச்சினையாக எழுப்பப் போதாக இடது சாரிக் கட்சிகள் அறிவித்தன. மேலும் நாடு முழுவதும்போராட்டம் நடத்தப் போவதாகவும் அவை அறிவித்தன.
இதனால் நெளிந்த காங்கிரஸ் அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைப்பது குறித்துபரிசீலித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பிக்களின் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் பெட்ரோல்விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 1 ரூபாயும் குறைக்கலாம் என முடிவுசெய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கை, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா சந்தித்துஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையல், பெட்ரோலியப் பொருட்களின் விலைகுறித்த விரிவான அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாயும்,டீசல் லிட்டருக்கு 1 ரூபாயும் குறைக்கப்படுவதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார்.இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications